செவ்வாய்க் கோளில், மூன்று ஏரிகளில் உள்ள நீரில் உப்புத்தன்மை அதிகம் இருப்பதால் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டுவருகின்றனர் என்று செவ்வாய் கோள் குறித்து அண்மைத் தகவல் வெளியாகியிருக்கிறது. 14,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: செவ்வாய் கோளில் தென் துருவத்திற்கு அருகில் நிலத்திற்கு கீழே மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும்- கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக ஐரோப்பிய விண்வெளி மையத்திற்கு சொந்தமான மார்ஸ் எக்ஸ்பிரஸ், செவ்வாய் கோளைச் சுற்றிவருகிறது அந்த ஆய்வுக்கலத்தின் ரேடரின் தரவுகளைக் கொண்டு, செவ்வாய் கோளின் தென் துருவப் பகுதியில் நிலத்திற்கு அடியில் 20 கிமீ அகலமுள்ள ஏரி இருப்பதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. அந்தவகையில், தற்போது மீண்டும் 3 ஏரிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூவியைத் தவிர்த்து பிற கோள்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் மிகவும் முதன்மைப் பங்கு வகிக்கிறது என்று சொல்லப்படுகிறது இந்த கண்டுபிடிப்பு. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மூன்று ஏரிகளில் உள்ள தண்ணீரில் உப்புத்தன்மை அதிகம் இருப்பதால் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டுவருகின்றனர். இதுகுறித்து பேசிய ஆய்வுக் குழு இயல்அறிவர் (சயின்டிஸ்ட்) எலெனா பெட்டினெல்லி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த தகவலை உறுதி செய்து இந்த மூன்று புதிய ஏரி பகுதிகளையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். முதன்மையான ஏரியானது திரவ நிலையில் நீர் கொண்ட சிறிய அமைப்புகளால் சூழப்பட்டுள்ளது. அந்த ஏரிகள் ஒன்றுக்கொன்று இணைந்துள்ளனவா என்பது குறித்து இன்னும் தெளிவுபடுத்த முடியவில்லை. செவ்வாய் கோளில் உயிரிகள் வாழ முடியுமா என்பது அங்கு காணப்படும் நீர் ஆதாரங்கள் எவ்வளவு உப்புத்தன்மை கொண்டவை என்பதைப் பொறுத்தே அமையும்” என்று தெரிவித்துள்ளார். நாம் வாழும் புவி எழுபத்தியோரு விழுக்காடு நீரால் சூழப்பட்டுள்ளது. அந்த நீர் மழை என்கிற நீர் நிருவாகத்தால் மலைகளில் உற்பத்தியாகி இறங்கியோடும் அருவிகள், புவியெங்கும் வற்றும், வற்றாத ஏராளமான ஆறுகள், ஏராளமான ஏரிகள், குளங்கள், குட்டைகள் என்று நிருவகிக்கப் படுகின்றன. உப்பு நீரிலேயே உயிரினத் தோற்றம் நிகழ்ந்தது என்று இயல்அறிவில் (சயின்ஸ்) பேசப்பட்டாலும், இந்த வகை நன்நீர்நிலைகளை யெட்டியே உயிரினப் பெருக்கமும், வளர்ச்சியும் மனிதன் சமைத்த உலக நாகரீகங்களும் நிகழ்த்;தப்பட்டு வந்துள்ளன. உலகில் தமிழன் மட்டுமே பாய்ந்தோடும் ஆறுகளை மட்டுமே நம்பியிராமல், ஏரிகளையும், கேணிகளையும், கிணறுகளையும் உருவாக்கி நீர் இறைத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலையென அனைத்து நிலப்பகுதிகளிலும் நாகரீகம் சமைத்தான். ஆனாலும் தமிழனுக்கும் மழை என்ற நீர் நிருவாகம் தேவையாகவே இருந்து வருகிறது. எனவே செவ்வாய் கோளில் உயிரினத் தோற்றத்திற்கான உப்புநீர் ஏரியாக காணப்பட்டால் மட்டும் போதாது. நீர் நிருவாகத்திற்கான மழையும் கட்டாயம் தேவை என்றே அறிய முடிகின்றது- நமது தமிழ் முன்னோர்களின் இயற்றமிழ் நூல்கள் மூலம். குறள் 17:
மூன்று ஏரிகளில் உள்ள நீரில் உப்புத்தன்மை அதிகம் இருப்பதால் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டுவருகின்றனர் என்றும் செவ்வாய் கோள் குறித்து அண்மைத் தகவல் வெளியாகியிருக்கிறது.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
மு.வ உரை:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்
சாலமன் பாப்பையா உரை:
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்
கலைஞர் உரை:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



