Show all

ஒட்டுமொத்த உலகில் ஒரேயொருவர் குணமடைந்ததாகத் தகவல்! கொரோனா தொற்றுக்குள்ளான சீனப்பெண் குணமடைந்ததாக- இலங்கையிலிருந்து.

கொரோனா நுண்ணுயிரி பாதிப்புக்கு உள்ளான சீனப்பெண் நோயிலிருந்து விடுபட்டுள்ளதாக இலங்கையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. சாத்தியம்தானா என்கிற பரபரப்பு உலகைத் தொற்றிக் கொண்டுள்ளது.

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கை அங்கொடை அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நுண்ணுயிரி தொற்றுக்குள்ளான சீன பெண் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் நாளை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு நலமுடன் அனுப்பப்பட விருப்பதாக நலங்குத்துறை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

சீனாவின் கூபெய் மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 43 அகவை சீனப் பெண் கடும் காய்ச்சல் காரணமாக அங்கொடை தொற்று நோயியல் பிரிவில் கடந்த கிழமை அனுமதிக்கப்பட்டார். குருதிப் பரிசோதனையின் மூலம் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

சிறப்பு சிகிச்சை மற்றும் பாதுகாப்பு நடைமுறையின் கீழ் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் அவர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றார். இந்நிலையில், அவர் குணமடைந்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.