Show all

சீனாவுக்கு வெளியே முதல் மரணம்! சீனாவில் உருவான கொரோனா நுண்ணுயிரி பலிகொண்டது.

கொரோனா நுண்ணுயிரி பாதிப்புக்கு உள்ளான ஒருவர் பிலிப்பைன்ஸில் பலியாகி உள்ளார். சீனாவுக்கு வெளியே பதிவாகும் முதல் மரணம் இது.

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி பாதிப்புக்கு உள்ளான ஒருவர் பிலிப்பைன்ஸில் பலியாகி உள்ளார். சீனாவுக்கு வெளியே பதிவாகும் முதல் மரணம் இது.

அகவை 44 உடைய இந்த நபர், கொரோனா நுண்ணுயிரி பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் ஹ_பே மாநிலத்தில் உள்ள வுகான் நகரத்திலிருந்து அண்மையில் பிலிப்பைன்ஸ் வந்தவர் ஆவார். பிலிப்பைன்ஸ் வருவதற்கு முன்பே அவர் கொரோனா நுண்ணுயிரி பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம் என்கிறது உலக நலங்குத்துறை அமைப்பு.

சீனாவுக்கு வெளியே பதிவாகி உள்ள முதல் மரணம் இது என்கிறார் உலக நலங்குத்துறை அமைப்பின் பிலிப்பைன்ஸ் பேராளர் ரபிண்ட்ரா. மேலும் அவர், ‘இது உள்ளூரில் ஏற்பட்ட பாதிப்பு அல்ல. அந்த நபர் கொரோனா நுண்ணுயிரி பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்திலிருந்து வந்திருக்கிறார் என்றார். சீனாவிலிருந்து வரும் சுற்றுலா பணிகளுக்கு பிலிப்பைன்ஸ் தடை விதித்த சில மணி நேரங்களில் இந்த மரணம் பதிவாகி உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.