Show all

பாதிக்கப்பட்டஉயிரின் அனிச்சை செயல்! கையிலெடுத்த போது கடித்து விட்டதாம், துண்டிக்கப் பட்ட பாம்பின் தலை

25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மிலோ சட்கிளிப் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது அங்கே நான்கு அடி நீளமுள்ள ரேட்டில்ஸ்நேக் வகைப் பாம்பைக் பார்த்திருக்கிறார், அவசரமாக கையில் இருந்த களைவெட்டியால் அப்பாம்பின் தலையைத் துண்டித்ததாக அவரது மனைவி ஜெனிபர் கூறுகிறார்.

மிலோ அந்தத் துண்டிக்கப்பட்ட தலையை அப்புறப்படுத்துவதற்காக கையில் எடுத்தபோது அது அவரைக் கடித்துள்ளது. அவருக்கு 26 முறை நச்சுமுறிவு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

உடனடியாக அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. தலை வெட்டப்பட்ட சில மணிநேரங்களுக்கு பின்னும் தம்மைத் தாக்குபவர்களைக் கடிக்கும் அனிச்சை செயல்பாடு பாம்புகளுக்கு உயிர்ப்புடன் இருக்கும்.

அவர் உடனடியாக அருகிலுள்ள கார்பஸ் கிறிஸ்டி மருத்துவமனைக்கு உலங்கு வானூர்தி மூலம் கொண்டுசெல்லப்பட்டார்.

ஒருகிழமை முடிந்து தற்போது உயிராபத்தைக் கடந்துள்ள மிலோவுக்கு சிறுநீரக செயல்பாட்டில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப் பட்ட உயிர் எதுவானாலும் அதன் அனிச்சை செயல் தொடருவது இயல்புதான்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,812. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.