25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சர்வதேச அளவில், அமைதியான நாடுகள் குறித்த ஆய்வு நடத்திய ஆஸ்திரேலியாவை சேர்ந்த அமைப்பு ஒன்று பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில், கடந்த பத்து ஆண்டுகளாக ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், நியூசிலாந்து, போர்ச்சுகல், ஆஸ்திரியா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் உள்ளன. கடைசி இடத்தில் சிரியா உள்ளது. இதற்கு முன், ஆப்கன், ஈராக், தெற்கு சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா 137 வது இடத்தில் உள்ளது. காஷ்மீர் பிரச்னை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்படுவதாக அந்த அமைப்பு வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,812.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



