புவிக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கிற ஓசோன் படலத்தில் ஓட்டை போடுதல், புவிக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கிற காடுகளை அழித்தல் போன்ற புவிவாழ் மனிதர்கள் நடவடிக்கையால், புவியின் வெப்பம் கூடிக் கொண்டே போகிறது. அதனால் வடதுருவ. தென்துருவப் பனிப்பாறைகள் உருகி, புவியின் கடல் மட்டம் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. அதற்கு பலிகடாவாகிறது எட்டு அடி மூழ்கிய இந்தோனேசியா தலைநகர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,138.
17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகில் வேகமாக மூழ்கும் நகரமான ஜகார்த்தாவில் இருக்கும் தலைநகரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய இந்தோனேசிய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தா மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் மூன்று கோடி பேர் வசித்து வருகின்றனர். பெருநகரங்களில் மக்கள் நெருக்கடியை கட்டுப்படுத்தவும், புதிய நகரங்களை உருவாக்கி மக்களை அங்கு குடியமர்த்தவும் இந்தோனேசியா அரசு தீர்மானித்துள்ளது.
அதன்படி முதற்கட்டமாக ஜகார்த்தாவில் உள்ள தலைநகரை ஜாவா தீவில் உள்ள வேறு இடத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
வடக்கு ஜகார்த்தா நகரம் கடந்த பத்து ஆண்டுகளில் எட்டு அடி மூழ்கியிருப்பதாகவும், ஜகார்த்தாவின் பெரும் பகுதி இன்னும் 30 ஆண்டுக்குள் கடலில் மூழ்கிவிடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.