Show all

பாஜக கொடுங்கோன்மை! தேர்தல் கருத்துப் பரப்பதலுக்கு, நன்றியுள்ள நாயைத் தெருத்தெருவாக அலையவிட்ட பரிதாபம்.

பாஜகவுக்கான தேர்தல் கருத்துப்பரப்புதலாக,  நாய் ஒன்றின் கழுத்தில் பாஜக கொடியைப் பொருத்தி தெருத் தெருவாக அலைய விட்டிருக்கிறார் ஒரு பாஜக நபர். அந்த நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கொடி பொருத்தப் பட்ட நாய் ஒன்று தெருத்தெருவாக அலைந்து திரிவதைக் கண்;ட தேர்தல் அதிகாரிகள் அந்த நாயைக் கைப்பற்றினர்.
தேர்தல் கருத்துப்பரப்புதல் காலக்கெடு முடிந்த பின்னர் அந்த நாய் கருத்துப்பரப்புதல் செய்ததாகவும், இதனால் அந்த நாயை பிடித்ததாகவும் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதனையடுத்து அந்த நாயின் உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், தேர்தல் கருத்துப்பரப்புதலில் விலங்குகளை பயன்படுத்த கூடாது என்று விதியிருந்தும் விதியை மீறி கருத்துப்பரப்புதல் செய்ததாக நாயின் உரிமையாளர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 
'பாஜக ஆட்சிக்கு வந்தால் நாய்களுக்கு வாக்கு பதிவு அளிப்போம் என்பது போல் இருக்கிறது' என்பது போல பலவாறாக இணையத்தில் கிண்டல் ஓடிக் கொண்டிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,138.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.