Show all

திரிணாமுல் காங்கிரசின், 40 சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் முடிந்து விட்டதாக மோடி பெருமிதம்! மோடிக்கு தி.காங் காட்டமான அறிவுரை

திரிணாமுல் காங்கிரசின் நாற்பது சட்டமன்ற உறுப்பினர்களுடன் தான் தொடர்பில் உள்ளதாகத் தெரிவித்த மோடிக்கு!  கருத்துப்பரப்புதல் செய்கிறீர்களா? குதிரை பேரம் நடத்துகிறீர்களா? என்று திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மோடி நேற்று மேற்கு வங்காளத்தில் தேர்தல் கருத்துப்பரப்புதலுக்கான சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது திரிணாமுல் காங்கிரசின் நாற்பது சட்டமன்ற உறுப்பினர்களுடன் தான் தொடர்பில் உள்ளதாகத் தெரிவித்த மோடிக்கு!  'தேர்தல் முடிந்து இந்த முயற்சியில்தான் ஈடுபடுவீர்கள் அது எங்களுக்குத் தெரியும். தேர்தல் நேரத்தில் மக்கள் மனங்களைக் கவர கருத்துப் பரப்புதல் செய்யுங்கள். உங்கள் தலைமை அமைச்சர் பதவி முடிந்து விட்டது. நடப்பது பாராளுமன்றத் தேர்தல். சட்டமன்ற உறுப்பினர்களைக் கவர்ந்து என்ன செய்யப் போகின்றீர்கள்? குதிரை பேரம் வேண்டாம்.' மோடிக்கு திரிணாமுல் காங்கிரஸ் காட்டமான அறிவுரை.
மோடி பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த முதன்மைத் தலைவர்களில் ஒருவரான தெரிக் ஓபிரைன் கூறுகையில், 'காலாவதியான தலைமைஅமைச்சர் நீங்கள் என்பது உங்களுக்கு புரிந்து விட்டதா? அதனாலேயே கருத்துப் பரப்புதல் செய்வதற்கு பதிலாக குதிரைப் பேரத்தில் ஈடுபடுகின்றீர்களா?  ஒரு கவுன்சிலர் கூட வரமாட்டார். நீங்கள் குதிரை பேரம் நடத்துவதை உங்கள் வாக்குமூலத்துடனே இன்று நாங்கள் தேர்தல் அணையத்திடம் புகார் அளித்துள்ளோம்'' என்றார்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,138.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.