Show all

தமிழகத்தில் மூடப்பட்ட தொழில் நிறுவனங்கள்: 49,329 வேலை இழந்தவர்கள்: 5,19,075 கடந்த ஓராண்டில்

25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரத்து 329 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டை கணக்கில் எடுத்துக்கொண்டால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 981 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. முதலீட்டின் அளவும் ரூ.25,373.12 கோடி என்ற அளவுக்கு சரிந்துள்ளது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கையும் 13 லட்சத்து 78 ஆயிரத்து 544 ஆக குறைந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொள்கை விளக்க குறிப்பின் அடிப்படையில் பார்க்கும்போது, கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49,329 எண்ணிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால், வேலைவாய்ப்பை 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் இழந்துள்ளனர். 

நடுவண் அரசின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கை முடிவுகளும், தமிழக அரசின் தொழிற்துறை பாதுகாப்பு முனைப்பின்மையுமே காரணம் என்கின்றனர் தொழிற்துறை வல்லுநர்கள்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,812. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.