ரஷ்யாவில் நடந்த சர்வதேச நாடுகளிடையேயான போர் பீரங்கி போட்டியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய போர் பீரங்கி பாதியிலேயே வெளியேறியது. மாஸ்கோவின் அலபினோ பகுதியில் சர்வதேச நாடுகளிடையேயான பீரங்கி போட்டி நடைபெற்றது. இதில் 19 நாடுகள் தங்கள் நாட்டு போர் பீரங்கிகளை அணிவகுத்து நிறுத்தியிருந்தன. இந்தியா ரஷ்யா வடிவமைத்து தந்த டி90 மெயில் பேட்டில் இந்த போட்டியில் பங்கேற்க அனுப்பியது. திடீரென போர் பீரங்கியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய இந்திய ராணுவ வீரர்கள் முயற்சித்தும் கோளாறு சரிசெய்யப்பட முடியவில்லை, இதனால் போட்டியிலிருந்து இந்திய போர் பீரங்கிகள் பாதியிலேயே வெளியேறும் நிலை ஏற்பட்டது. இந்திய ராணுவத்தின் ஒரு போர் பீரங்கியில் சுழலும் மின்விசிறி உடைந்ததோடு, மற்றொரு வாகனத்தில் என்ஜினில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. ரேடியேட்டரில் ஏற்பட்ட உயர் வெப்பம் காரணமாக தொடர்ந்து என்ஜினை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து போட்டியில் பங்கேற்ற சீனா, ரஷ்யா, பெலாரஸ், கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தன. ரஷ்யாவும் கஜகஸ்தானும் டி72பி3 ரக டாங்கிகளுடன் போட்டியில் பங்கேற்றன. இதே போன்று பெலாரஸ் டி72 சீனா 96பி ரக பீரங்கியுடன் அணிவகுத்தன. இந்தியா ரஷ்யா வடிவமைத்து தந்த டி90 மெயில் பேட்டில் டாங்கியுடன் பங்கேற்றுள்ளது. கடந்த காலங்களில் இந்தியா இந்த போட்டிகளில் டி72 ரக டாங்கிகளுடன் பங்கேற்று, தங்களது படைத் திறனை வெளிப்படுத்தியுள்ளது. இறுதிச் சுற்றில் மோதிய நாடுகளில் ரஷ்யாவின் ராணுவ வாகனம் முதலிடம் பெற்றுள்ளது. பந்தய தூரத்தை 1 மணி நேரம் 30 விநாடிகள் 43 நொடிகளில் கடந்து வெற்றி பெற்றுள்ளது. கஜகஸ்தான் இரண்டாவது இடத்தையும் சீனா மூன்றாவது இடத்தையும், பெலாரஸ் 4வது இடத்தையும் பெற்றுள்ளதாக போட்டியாளர்கள் அறிவித்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



