உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவித்த குழந்தைகள், மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு இயங்கி வருகிறது. இங்கு கடந்த 2 நாட்களில் சுமார் 33 குழந்தைகள் உயரிழந்துள்ளன. கடந்த 5 நாட்களில் மொத்தம் 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இது குறித்து மாவட்ட அறங்கூற்றுவர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. உயிர்வளி குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்வளி பற்றாக்குறையை நீக்கி குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. அவர் தனது விசாரணை முடிவில், உயிர்வளி உருளை விநியோகம் செய்யும் தனியார் நிறுவனத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் நிலுவை தொகை வழங்கவில்லை பண பாக்கிகாரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். வினியோகத்;தருக்கு ரூ.66 லட்சம் பாக்கியை அரசு செலுத்தாததால், உயிர்வளி விநியோகம் பாதிக்க ப்பட்டதாகவும் அதனால் இந்த விபரீதங்கள் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இரு நாட்கள் முன்புதான் இந்த மருத்துவமனையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு நடத்தியிருந்தார். ஆனால் உயிர்வளி பற்றாக்குறை குறித்து அவரது கவனத்திற்கு எப்படி வராமல் போனது என்ற கேள்வி எழுந்துள்ளது. கோரக்பூர் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்திற்கு காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டத்தைத் தெரிவித்துள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



