Show all

அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸ் நகரில் விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸ் நகரில் விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

துப்பாக்கி சூட்டிற்கும், தீவிரவாத தாக்குதலுக்கும் சம்பந்தம் கிடையாது என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இரு குழுக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, துப்பாக்கி சூடு நடந்து உள்ளது என்று அந்நாட்டு மீடியாக்கள் தகவல்கள் வெளியிட்டு உள்ளது. விளையாட்டு மைதானத்தில் மியூசிக் வீடியோ உருவாக்கும் பணியில் சுமார் 500 பேர் குடியிருந்தபோது துப்பாக்கி சூடு நடந்தது என்று செய்திகள் வெளியாகிஉள்ளது. இரண்டு பேர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்து உள்ளனர். துப்பாக்கி சூட்டை அடுத்து மக்கள் அனைவரும் கீழே படுத்துக் கொண்டனர்.  

சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆம்புலன்சுகள் கொண்டுவரப்பட்டு காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயம் அடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்தியவர்களையும் போலீசார் தேடிவருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்திஉள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.