Show all

கொரோனாவுக்கு அமெரிக்காவிலிருந்து வெளியாகும் மூன்றாவது தடுப்பூசி! பில்கேட்ஸ் அறக்கட்டளை இன்று பரிசோதனை


பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஐஎன்ஓ-4800 என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை இன்று பரிசோதனை செய்ய உள்ளனர்.

25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நுண்ணுயிரி இதுவரை உலகம் முழுவதும்  13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ள நிலையில் 75,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நுண்ணுயிரி பரவலை தடுக்க தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா மாகாணத்தில் பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஐஎன்ஓ-4800 என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை இன்று பரிசோதனை செய்ய உள்ளனர். இதற்காக 40 பேரை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். சோதனைக்கு முன்வந்தவர்களுக்கு 4 கிழமை இடைவெளியில் தடுப்பூசி போடப்படும்.

இந்தப் பரிசோதனை வெற்றியடைந்தால், அடுத்ததாக உலக நலங்கு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு இறுதிக்கள் 10 லட்சம் தடுப்பூசிகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர். 

இந்த தடுப்பூசியின் அமைப்பு, செயல்பாடு போன்ற தொழில்நுட்பத் தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.