Show all

இந்தியாவிற்கு நன்மையா! தீமையா? மாத்தளை ராஜபக்சே சர்வ தேச விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை அரசு திட்டம்

22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்திரா காலத்தில் இந்திரா காந்தியிடம் இருந்தது. வங்காளியரின் தாய்மண் இந்தியா என்ற நிலையில், பாகிஸ்தானுக்கு அடிமைப் பட்டுக் கிடந்த கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேசம் என்ற விடுதலை பெற்ற நாடாக மீட்டுத் தந்தார் இந்திரா காந்தி அவர்கள்.

அதே அடிப்படையில் ஈழத்தமிழர்களின் தொப்புள் கொடி உறவான தமிழர்களின் தாய்மண் இந்தியா என்ற நிலையில், சிங்களவர்களுக்கு அடிமைப் பட்டுக் கிடக்கும் ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் பெற்றுத் தர முனைந்திருந்தார் இந்திரா. இந்திராவிற்கு பின் வந்த ராஜிவ்காந்தி காலத்தில், இந்திய வெளியுறவுக் கொள்கை தமிழ் விரோத சக்திகள் நிறைந்த ரா உளவுத் துறை மற்றும், அதிகாரிகள் கைக்குப் போனதால் இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கை தலைகீழாகிப் போனது. அதனால் நாம் இழந்தது 1.ராஜிவ்காந்தி, 2.தமிழீழ விடுதலை 3.ஈழத்தமிழர்கள் மீதான இந்திய ஆதரவு மனப்பான்மை ஆகியன.

பாஜக ஆட்சியில், அதே அதிகாரமட்டம் உண்மையில் பாஜக என்கிற நிலையில், வெளியுறவுக் கொள்கையில் ராஜிவ் காலத்து நிலையே தொடர்கிறது. வங்காள மக்களையும், தமிழர்களையும் தேச விரோதிகள் போல சித்தரிக்க முயலுகிறார்கள்.

இவ்வாறன நிலையில், இலங்கை ஹம்பந்தோட்டையில் உள்ள மாத்தளை ராஜபக்சே சர்வ தேச விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கும் திட்டத்தால் இந்தியாவிற்கோ எல்லை பகுதியில் இருக்கிற ஈழத்தமிழர்களுக்கோ, இந்தியத் தமிழர்களுக்கோ எந்த நன்மையும் விளையப் போவதில்லை. இலங்கை ஹம்பந்தோட்டையில் உள்ள மாத்தளை ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த வரைவுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. 

மாத்தளை ராஜபக்சே விமான நிலையம் கொழும்பிலிருந்து 241 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹம்பந்தோட்டையில் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து சேவையைத் தொடங்கிய ஹம்பந்தோட்டை விமானநிலையம் இரண்டு மாதங்களுக்கு முன்பு போக்குவரத்தை நிறுத்தியது. 

இந்தியாவுடன் இணைந்து 241 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் மீண்டும் ஹம்பந்தோட்டை விமான நிலையம் இயக்கப்படும் எனச் சிறிசேனா அரசு அறிவித்துள்ளது. மறுகட்டமைப்பு செய்வதற்கான வரைவுத் திட்டம் குறித்து இந்திய அரசிடம் இலங்கை பேசியுள்ளது. பேச்சுவார்த்தை இதற்கான இறுதி வரைவு அறிக்கை இலங்கை அமைச்சரவை முன்பு வைக்கப்பட்டது. இதில் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்புக் குறித்துக் கேட்க முடிவு செய்யப்பட்டது. இருதரப்புக்கும் இடையே இது தொடர்பாகப் பேச்சு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தியா முடிவு குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. வர்த்தக விரிவாக்கம், திட்டவரைவு விமான நிலைய கட்டுப்பாடு, போக்குவரத்து உரிமை மற்றும் வர்த்தகச் செயல்பாடுகளை இலங்கை அரசே வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு 1 பில்லியன் பயணிகளின் போக்குவரத்துக்கு லாகவமான இந்த விமான நிலையத்தில் 5 பில்லியனாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் 50000 டன் சரக்குகளைக் கையாளவும், விமானப்போக்குவரத்து நடவடிக்கைகளை உயர்த்தவும் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலீடு செய்யுமா இந்தியா 2017 ஆண்டு

ஹம்பந்தட்டை விமான நிலையத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தும் யாரும் முன்வரவில்லை என்று தெரிவித்த இலங்கை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிர்மல் சிறீபாலா, தற்போது இந்தியாவிடம் உதவி கோரியுள்ளதாகக் கூறினார். இந்தியா சம்மதித்தால் 70 விழுக்காடு பங்கை வழங்க இலங்கை முடிவு செய்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,872.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.