Show all

எழுந்து வா தலைவா! கலைஞர் சிகிச்சை பெற்று வரும் காவிரி மருத்துவமனையில் தொண்டர்கள் உணர்ச்சி முழக்கம்

21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக தலைவர் கலைஞர் முகருணாநிதி அவர்கள் கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனைக்கு அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தியம்மாள் உள்ளிட்டோர் சென்றனர். பின்னர் முதல் முறையாக தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில் இன்று மாலை காவேரி மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கருணாநிதியின் முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் 24 மணி நேரம் கழித்தே அவரது உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை வைத்தே எதையும் சொல்ல முடியும் என்று மருத்துவமனை தனது ஆறாவதாக வெளியிட்ட  அறிக்கையில்  தெரிவித்துள்ளது.

இதனால் தொண்டர்கள் கலக்கம் அடைந்து மருத்துவமனையில் குவிந்த வண்ணம் உள்ளனர். காவல்துறை பாதுகாப்பும் அதிகப் படுத்தப் பட்டுள்ளது. தொண்டர்கள் கண்ணீரும் கம்பலையுமாக எழுந்து வா தலைவா என்று உணர்ச்சி பெருக்குடன் முழக்கமிட்டு வருகின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,871.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.