Show all

இன்று தேசிய கைத்தறிநாள்

22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கைத்தறி தொழில், வேளாண்மைக்கு அடுத்தபடியாக ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதில் முதன்மைப் பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் சுமார் 1.90 லட்சம் நெசவாளர் குடும்பங்கள் உள்ளதுடன், அந்தத் தொழில் 3.19 லட்சம் நெசவாளர்கள், நெசவு சார்ந்த உப தொழில் புரிவோருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க கைத்தறித் தொழிலின் வளர்ச்சிக்காக தமிழக அரசின் சார்பாக 1.55 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில், விலையில்லாத வேட்டி, சேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கைத்தறி நாளான இன்று, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களும், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் விற்பனை நிலையங்களிலும், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களை வாங்கி அணிந்து கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேளாண்மையும், கைத்தறியும் தமிழர் தற்சார்பு பொருளாதாரத்திற்கானது. போற்றிக் கொள்வோம்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,872.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.