03,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரூபாய் ஒன்பது லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் கடலில் மூழ்கிய ரஷ்ய போர்க்கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிமிட்ரி டோன்ஸ்கோய் என்ற போர்க்கப்பல் 113 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானுடன் சுஷிமா என்ற இடத்தில் போரில் ஈடுபடுத்தப்பட்டது. அப்போது ஜப்பானின் சரமாரியான தாக்குதலில் அந்தக் கப்பல் கடலுக்குள் மூழ்கியது. அப்போது அந்தக் கப்பலில் 200 டன் அளவிலான தங்கக் கட்டிகள் தலைநகர் மாஸ்கோவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தென்கொரிய கடல் பகுதியில் சுமார் 1400 அடி ஆழத்தில் இந்தக் கப்பல் மூழ்கிக் கிடப்பதை ஷினில் என்ற குழுமம் கண்டுபிடித்துள்ளது. தங்கத்தை எடுத்துக் கொடுக்க வேண்டுமானால் தங்களுக்கு பத்து விழுக்காடு வழங்கவேண்டும் என ஷினில் குழுமம் ரஷ்யாவிடம் கேட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,853.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



