02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, பெங்காலி, குஜராத்தி, பஞ்சாபி, ஒரியா, உருது, அசாமி, ஹிந்தி ஆகிய 17 மொழிகளில் பேசுவதற்கு மாநிலங்களவையில் அனுமதி உண்டு. இந்நிலையில், போடோ, மைதாலி, காஷ்மீரி உள்ளிட்ட 5 மொழிகளில் பேசுவதற்கு அண்மையில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த 22 மொழிகளிலும் பேசுவதற்கு ஏதுவாக மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக துணை குடிஅரசு தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கைய நாயுடு உறுப்பினர்களுக்கு விளக்கும் விதமாக அவர்களுடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், குஜராத்தி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி ஆகிய 10 மொழிகளில் பேசி அசத்தினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,852.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



