03,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட இருக்கும் புதிய 100 ரூபாய் தாளின் மாதிரியை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ரூபாய் தாளிலும்; ஒரு படம் இருப்பது போன்று புதிய 100 ரூபாய் தாள்களில் குஜராத்தில் உள்ள ராணி கி வாவ் படம் பொறிக்கப்பட்டு இருகிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸ் அரசு அச்சகத்தில் புதிய 100 ரூபாய் தாள்கள் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய 100 ரூபாய் தாள் ஊதா நிறத்தில் இருக்கும் என்றும், புதிய நோட்டால் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது என்றும் எப்போது போல பயன்படுத்தலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. புதிய ரூபாய் தாள் பழைய தாள் போன்று இல்லாமல் புதிய 10 ரூபாய் தாளினை விடச் சற்றுப் பெரியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். எனவே வங்கிகளுக்கு மீண்டும் பணம்வழங்கும் இயந்திரங்களை மாற்றி அமைக்கும் அபாயமும் உள்ளது. புதிய 100 ரூபாய் தாள்களில் குஜராத்தில் உள்ள ராணி கி வாவ் படம் பொறிக்கப்பட்டு இருகிறது. பார்வையற்றவர்கள்; புதிய 100 ரூபாய் தாளினை அடையாளம் காண இரண்டு புறமும் 4 கோடுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தடவிப் பார்த்து புதிய 100 ரூபாய் தாளினை அடையாளம் காணலாம். ஹிந்தி கடன் வாங்கி பயன் படுத்திப் கொண்டிருக்கும் தேவநாகிரி எழுத்தின் எண் வடிவத்தில் 100 ரூபாய் என பொறிக்கப்பட்ட அடாவடியும் தொடரும். அசோகர் தூண் வலது பக்கமும், காந்தி புகைப்படம் நடுவிலும், இருக்கும். ராணி கி வாவ் படத்தினை ஒட்டி 15 மொழிகளில் 100 ரூபாய் என பொறிக்கப்பட்டு இருக்கும். அதில் தமிழ் மொழியில் 13 வது இடத்தில் 100 ரூபாய் என்று இருக்கும். வீணாய் போன தூய்மை இந்தியா இலட்சினையும் பொறிக்கப்பட்டு இருக்கும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,853.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



