தங்கம் இருப்பு வைத்திருக்கும் பட்டியலில், இன்றைய தங்க மதிப்பீட்டின்படி, ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் கோடிக்கு தங்கம் இருப்பில் கொண்டு, பத்தாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. 20,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பண்ட மாற்று முறை இன்று அமலில் இருந்தால், பைக் வாங்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு உழவர் பைக்கின் விலைக்கு அரிசி அல்லது ஏதாவது உணவு பொருள் கொடுத்து பைக்கை வாங்க வேண்டும். இந்தக் கடுமையான நடவடிக்கையை எளிமைப் படுத்தும் முகமாக தங்கமும், தங்க நாணயங்களும் பண்ட மாற்றுப் பொருளாக சங்ககாலத் தமிழ் வணிகர்களால் அறிமுகம் செய்யப் பட்டது. தற்போது உலக நாடுகள் அனைத்தும் வெறுமனே உலோக நாணயங்களையும், அதனினும் மதிப்பு குறைந்த காகிதம் மற்றும் நெகிழித் தாள்களையும் தங்கத்தை இருப்பு வைத்துக் கொண்டு பண்ட மாற்றாக பயன் படுத்தி வருகின்றன. அந்த வகையாக தங்கத்தை இருப்பாக வைத்துக் கொண்டு இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 10வது இடத்தில் இருக்கிறது. உலக தங்கத்திற்கான குழுவின் கணக்குப் படி இந்தியா தற்போது 618.2 டன் தங்கத்தை இருப்பாக வைத்து இருக்கிறது. அதாவது, இன்றைய தங்க மதிப்பீட்டின்படி இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் கோடிக்கு தங்கம் இருப்பு வைத்துள்ளது! நாடுகள் படி கணக்கிட்டால் இந்தியாவுக்கு 9-வது இடம். ஆனால் தங்க இருப்பு வைத்திருக்கும் முதல் பத்து பட்டியலில் சர்வதேச பன்னாட்டு நிதியமும் இடம் பிடித்து இருப்பதால் இந்தியாவுக்கு 10-வது இடம். உலக அளவில் அமெரிக்கா 8,133 டன் தங்கத்துடன் வழக்கம் போல முதல் இடத்தில் இருக்கிறது. பிரான்ஸ் 2,436 டன் தங்கம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,267.
அதிலும் ஒவ்வொரு நாடும் தங்கள் வசதிக்கேற்ப இருப்பு வைத்திருக்க வேண்டிய தங்கத்தை விட அதிகமாக பணத்தாள்களை வெளியிட்டு தங்கள் பணத்தாள் மதிப்பைக் குறைத்துக் கொள்கின்றன.
அவர்களைத் தொடர்ந்து ஜெர்மனி 3,366 டன் தங்கத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது.
மூன்றாவது இடத்தில் சர்வதேச பன்னாட்டு நிதியம் 2,451 டன் தங்க இருப்புடன் இருக்கிறது.
இவர்களுக்குப் பின் தான் இத்தாலி 2,451 டன் தங்கம்.
ரஷ்யா 2,219 டன் தங்கம்.
சீனா - 1,936 டன் தங்கம்.
சுவிட்சர்லாந்து - 1,040 டன் தங்கம்.
ஜப்பான் - 765 டன் தங்கம்.
இந்தியா - 618 டன் தங்கம் உடன் பத்தாவது இடத்தில் இருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.