Show all

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை! பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்தது

மேற்கு வங்கம், இராஜஸ்தான் போன்று அல்லாமல், பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தை தமிழக எடப்பாடி அரசு ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், தமிழக மக்களுக்கும் இச்சட்டம் அமலுக்கு வந்ததுள்ளது.

20,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: போக்குவரத்து விதிகளை கல்வியாக மக்களுக்கு பயிற்றுவிக்க வேண்டிய அரசு, விதிமீறல்களை கட்டுப்படுத்த என்ற வகைக்காக, அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது இந்திய பாஜக அரசால். 

இந்தச் சட்டத்தை அமல் படுத்த மேற்கு வங்கம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் ஒப்புக் கொள்ளாத நிலையில், தமிழகத்தை பாஜகவின் கொடையாக ஆண்டுவரும் எடப்பாடி. பழனிச்சாமி அவர்களை முதல்வராகக் கொண்ட தமிழ்நாட்டு அரசு ஏற்றுக் கொண்டு அமல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், புதிய மோட்டார் வாகன சட்டப்படி அபராதம் வசூலிப்பதற்கான வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஞாயிறு முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்டப்படி அபராத தொகை  பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அபராதங்களை வசூலிக்கும் கருவியில் கட்டணம் மாற்றம் செய்யப்படாததால், வாகன சோதனையில் ஈடுபடும் காவல்துறையினர் நடுவே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள  அறிக்கையில், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்களுக்கு மேல் அதிகாரம் கொண்டவர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மட்டுமே அபராதம் வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் வழக்கம் போல, போக்குவரத்து காவலர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் நின்று வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் விதிமீறல் இருப்பதாக கருதும் நிலையில், வாகனங்களை பறிமுதல் செய்து அறங்கூற்றுமன்றத்தில் வழக்கை கொண்டு செல்வார்கள். அபராதம், காலவிரயம் ஆகியவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள, தமிழக மக்கள் விதிமீறல் இல்லாத வகையில் தங்கள் சாலைப்பயணத்தை கவனமாக முன்னெடுங்கள். எச்சரிக்கை!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,267.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.