Show all

டிரம்பின் இந்திய வருகையை விரும்பாதவர்கள் முன்னெடுத்தனர்! திரும்பி போ டிரம்ப் போராட்டங்கள்

“திரும்பி போ டிரம்ப்” என ட்ரம்ப் பெயரைப் பதிவிட்டு பதாகைகள் ஏந்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டங்கள் நடந்தன. டிரம்பின் இந்திய வருகையை விரும்பாதவர்கள் முன்னெடுத்தனர்.

13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 2 நாள் இந்திய வருகை உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க அதிபரின் இந்த 2 நாள் இந்தியப் பயணம் இரு நாடுகளிடையே பலனுள்ள சில வணிகத்தை உருவாக்கும் என கூறப்படுகிறது. ட்ரம்ப் இந்திய வருகையையொட்டி ‘வணக்கம் ட்ரம்ப்’ என்ற தலைப்பில் கூட்டம் ஒன்று குஜராத்தில் நேற்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. 

இந்த கூட்டத்திற்காகக் குஜராத் அரசு ரூ. 100 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவையும் அதன் போக்கையும், அந்நாட்டு அதிபர்களையும் தொடர்ந்து விமர்சித்து வரும் கம்யூனிஸ்ட் அமைப்புகள் சிலவும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தும் அமைப்புகள் சிலவும் ட்ரம்ப் இந்திய வருகையைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் நேற்று போராட்டம் நடத்தின.

குறிப்பாக டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரம்ப் வருகைக்கு எதிராக நடத்திய ஆர்பாட்டங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. சில இடங்களில் இது வன்முறையாகவும் மாறியது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.