தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன், தனது அடுத்த படத்துக்கான கதையை தயார் செய்து வருகிறார். அவரின் அடுத்த படத்தில் சிம்புவை இயக்கவிருக்கிறார் என்பது சிறப்புச் செய்தியாகப் பேசப்படுகிறது. 13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இயக்குநர் சேரன், தனது அடுத்த படத்தை- விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்ட பெரிய நடிகர்களை வைத்து பெருஞ்சிறப்பாய் இயக்கவிருக்கிறாராம். தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன், தனது அடுத்த படத்துக்கான கதையை தயார் செய்து வருகிறார். அவரின் அடுத்த படத்தில் சிம்புவை இயக்கவிருக்கிறார் என்பது சிறப்புச் செய்தியாகப் பேசப்படுகிறது. பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, பொற்காலம், ஆட்டோகிராப் உள்ளிட்ட பல மிகுவெற்றிப் படங்களை இயக்கியவர் சேரன். படத்திருட்டை முறியடிக்கவென்று, வீட்டுக்கே திரைப்படம் என்ற திரைத்துறையில் அவர் முன்னெடுத்த புதிய யுக்தி அவருக்கு கொஞ்சம் இழப்பை தந்தது. இந் நிலையில், அண்மையில் அவர்கலந்து கொண்ட தனியார் தெலைக்காட்சியின் பிக்பாஸ் பருவம் மூன்று நிகழ்ச்சி அவருக்கு பொருளாதார ஒத்துழைப்பை வழங்கியது. இந்நிலையில் தனது அடுத்த படத்துக்கான எழுத்து வேலைகளில் ஈடுபட்டு வரும் சேரன், அந்தப் படத்தில் சிம்பு மற்றும் விஜய் சேதுபதியை சேர்ந்து நடிக்க வைக்கப்போகிறாராம். முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் வந்த செக்க செவந்த வானம் படத்தில் சிம்புவும், விஜய் சேதுபதியும் ஒன்றாக நடித்திருந்தார்கள். சேரன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க சம்மதம் தெரிவித்திருந்த செய்தி முன்பே வெளியானது. இந்நிலையில் தான் இந்த படத்தை சேரன் பெருஞ்சிறப்பாய் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சேரன் இயக்கத்தில் சிம்பு - விஜய் சேதுபதி உள்ளிட்ட இன்னும் பலர் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அதிகாரப்பாட்டு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



