Show all

நேற்று நள்ளிரவு 11.00 மணிக்கு தனிக்குடித்தனம் போனது பிரிட்டன்! உலகைக் கட்டியாண்ட பிரிட்டனுக்கு- சொந்த மண்ணில், சொந்த அதிகாரம் போதுமாம்

கிட்டத்தட்ட 47 ஆண்டுகால கூட்டுக்குடித்தனத்திலிருந்து மீண்டது பிரிட்டன். ஆம் ஐரோப்ப ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரிட்டன். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்து வந்த பிரிட்டன் லண்டன் நேரப்படி இரவு 11 மணியளவில் இந்த வரலாற்று நிகழ்வை முன்னெடுத்தது. சாதித்த பெருமைக்குரியவர் போரிஸ்.  

18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்து வந்த பிரிட்டன் லண்டன் நேரப்படி இரவு 11 மணியளவில் ஐரோப்ப ஒன்றியத்திலிருந்து வெளியேறியது. கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த தொடர் முயற்சிகளில் இது சாத்தியமாக்கப்பட்டது. இது உலக அளவில் நிறைய பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில், ஐரோப்பா ஒன்றிய நாடாளுமன்றத்தில் இருந்து நேற்று பிரிட்டன் கொடி அகற்றப்பட்டது.

ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இடம்பெற வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தெரிந்துகொள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு மூன்றாண்டுகளுக்கு முன்பு பிரிட்டனில் நடத்தப்பட்டது. ஒன்றியத்திலிருந்து வெளியேற விரும்பி 50 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் வாக்களித்திருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய ராஜ்ஜியம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்காட்லாந்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும், லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் தனிக்குடித்தன ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரிட்டன் தலைமைஅமைச்சர் போரிஸ் ஜான்சனுக்கு பெரும்பான்மை இருக்கிறது. பொதுத்தேர்தலில் தலைமைஅமைச்சர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி அபாரமாக வென்றது. இந்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நோக்கத்தை முன்னெடுத்துவரும் போரிஸ் ஜான்சன் வென்றார். 

ஐரோப்பா ஒன்றியத்திலிருந்து இருந்து பிரிட்டன் வெளியேறும் என்ற சட்டமுன்வரைவுக்கு ஆதரவாக 330 பேர் வாக்களித்தனர். எதிராக 231 பேர் வாக்களித்தனர். இந்த சட்டமுன்வரைவு கீழவையில் நிறைவேற்றப்பட்டது. மேலவையிலும் போரிஸ் ஜான்சனுக்கு பெரும்பான்மை உள்ளது. இதனால் தற்போது பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து வெளியேறி உள்ளது. நேற்று ஐரோப்ப நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பிரிட்டன் கொடி நீக்கப்பட்டது. 

பிரிட்டனின் பல ஆண்டு கோரிக்கை இதனால் நிறைவேறி உள்ளது. இதனால் அந்நாட்டில் நிறைய பொருளாதார மாற்றங்கள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு மாதங்களில் பிரிட்டனை மொத்தமாக தனியாக போரிஸ் ஜான்சன் பிரித்து சென்று விடுவார் என்று கூறுகிறார்கள். இது சரியா தவறா என்று உலகம் முழுக்க விவாதம் நடந்தாலும், இது பிரிட்டனில் பெரும்பான்மையோர் விருப்பம். உலகை கட்டியாண்ட பிரிட்டன் ஒரு தனித்த பாரம்பரியத்தை, சொந்த மண்ணோடு மட்டும், வென்றெடுக்க கிளம்பியிருக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் வாழ்த்துவதே நியாயம்; வாழ்த்துவோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.