Show all

இன்று பதிகை வரவு-செலவுத் திட்டம்! தலைக்குப்புறக் கவிழ்ந்துகிடக்கும் பொருளாதாரம் தூக்கி நிறுத்தப்பட வேண்டிய கடப்பாடு- எப்படியிருக்கப் போகிறது

பொருளாதாரத்தினை மேம்படுத்த அனைத்து நடவடிக்கையும் அரசு மேற்கொண்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதிலும் பொருளாதாரம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் நடுவில் பதிகை  செய்யப்படவிருக்கிறது இந்த வரவு-செலவுத்திட்டம். 

18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: எதிர்பார்ப்புகளின் உச்சத்தில் மக்கள்.  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிகை செய்யவிருக்கிறார் வரவு-செலவுத்திட்டம். அதள பாதாளத்தில் உள்ள பொருளாதாரத்தினை மீட்கும் பொறுப்பில் நடுவண்பாஜக அரசு உள்ள நிலையில், இந்த வரவு-செலவுத்திட்டத்தில் என்னவெல்லாம் சொல்லப்போகிறார் நிர்மலா சீதாராமன்.

இந்த நிலையில் பல துறையிலும் இருந்தும் பல தரப்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளோம்; எனவே அனைவருக்குமான வரவு-செலவுத்திட்டமாக முன்னெடுப்போம் என்றும், பொருளாதாரத்தினை மேம்படுத்த அனைத்து நடவடிக்கையும் அரசு மேற்கொண்டுள்ளது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதிலும் பொருளாதாரம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் நடுவில் பதிகை  செய்யப்படவிருக்கிறது இந்த வரவு-செலவுத்திட்டம். 

குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய அறைகூவலாக இருக்கும் வேலையின்மை, அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை, உற்பத்தி துறை வீழ்ச்சி, வரி வருவாய் வீழ்ச்சி என நடுவண்பாஜக அரசினை ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த ஆண்டு வீழ்ச்சி கண்டு வரும் உற்பத்தி துறையினை ஊக்குவிக்கவும், முதலீடுகளை அதிகரிக்கவும் கார்ப்பரேட் வரி விகிதத்தினை குறைத்தது இந்த அரசு. ஆனால் நடுவண்பாஜக அரசு எதிர்பார்த்ததை போல அந்தளவுக்கு பெரிய அளவில் முதலீடுகள் எதுவும் வரவில்லை என்றே கூறலாம். 

இந்த நிலையில் வேலைவாய்ப்பினை பெருக்க ஏதேனும் நடவடிக்கை இருக்குமா என்னும் எதிர்பார்ப்பு அனைத்து மட்டத்திலும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாற்றம் ஒன்றே சாத்தியமாகி வருகிற தனி நபர் வருமான வரி என்பது குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் மக்கள். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.