நாளை இந்திய அரசின் நிதிநிலை அறிக்கையை பாஜக அரசு வெளியிட உள்ளது. இன்று அதையொட்டி பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பதிகை செய்தார். 17,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அந்த ஆய்வறிக்கையில்: வரப்போகும் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 6ல் இருந்து 6.5 விழுக்காடாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம்.
நடப்பு நிதியாண்டில் தொழில் துறையின் வளர்ச்சி 2.5விழுக்காடாக இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தரப்பினர் விமர்சிப்பதைப் போல இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாகவோ குறைத்தோ காட்டப்படவில்லை.
பொருளாதாரத்தை பொறுத்த வரை கடந்த ஆண்டு உலகிற்கே கடினமான ஆண்டு என்பதால் அது இந்திய பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அரசு ஒப்புக் கொள்கிறது.
ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதாரத்தை இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஐந்து ட்ரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருளாதாரமாக உயர்த்துவது சந்தையை வலுப்படுத்தலை சார்ந்துள்ளது, என்று அடுத்தும் தங்களுக்கே ஆட்சி தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்
வங்கித்துறையில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார சீர்திருத்தங்கள் துரிதமாக எடுக்கப்படும் என்று பொருளாதார அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தின் மொத்த மதிப்பீட்டில் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த துறைகளின் பங்கு கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணம் விவசாயம் அல்லாத துறைகளின் வளர்ச்சி என்கிறது இந்த ஆய்வறிக்கை.
மூன்று ஆண்டுக்குள் உழவர்களின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய ஆயுதங்கள் மற்றும் பெரும் வெடிபொருட்களுக்கு உரிமம் பெறுவதைவிட, டெல்லியில் ஒரு உணவகம் தொடங்குவதற்கு உரிமம் பெற அதிக ஆவணங்கள் சமர்பிக்க வேண்டிய நிலை இருக்கிறது.
சரக்கு ஏற்றுமதியைவிட சேவைகளின் ஏற்றுமதி கடந்த பத்தாண்டுகளில் அதிகமாக இருந்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



