ஆதிச்சநல்லூரைக் குறிப்பிட்ட நிதிநிலை அறிக்கை ஏன் கீழடியை குறிப்பிடவில்லை ஓ! ‘கீழடி தமிழர் தாய்மடி’ என்று உலகம் ஒப்புக்கொண்டுவிட்ட காரணத்தினாலா? ஆதிச்சநல்லூருக்கு காவி பூசப்பட்டுவிடுமோ என்று தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர். 19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேத கலாச்சாரத்தை சரஸ்வதி நாகரிகம் என பெயர்சூட்டி அதனை சிந்துவெளி நாகரிகத்தின் மீது பொருத்த ஹிந்துத்துவா வாதிகள் முன்னெடுக்கும் புதிய முயற்சியா நேற்று திடீரென உலகத்தின் முதல் நாகரிகமான சிந்துவெளி நாகரிகத்திற்கு சரஸ்வதி சிந்து நாகரிகம் என வரவுசெலவுத் திட்ட உரையில் பெயர் சூட்டி மகிழ்ந்தது? அச்சத்தை வெளிப்படுத்தும் அறிஞர் பெருமக்கள். அடுத்து வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் பதிகை செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அறிக்கையில், அவ்வையார், திருவள்ளுவர், போன்ற புலவர் பெருமக்கள், காளிதாசன் உள்ளிட்ட கவிஞர் பாடல்களை மேற்கோள் காட்டிப் பேசினார். அத்துடன், சரஸ்வதி சிந்து நாகரிகம் என்றும் புதிய சொல் பயன்பாட்டை முன்னெடுத்தார். இந்நிலையில், வேதகாலத்தை பண்பாட்டுடன் இணைக்க முயற்சிக்கும் செய்கை இது என்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இம்முறை பொருளாதாரம் தாண்டி வரலாறு பண்பாடு என்று தனது தாக்குதல் எல்லையை விரிவாக்கிக்கொண்டிருக்கிறார். வேத கலாச்சாரத்தினை சரஸ்வதி நாகரிகம் என பெயர்சூட்டி அதனை சிந்துவெளி நாகரிகத்தின் மீது பொருத்த தொடர்ந்து ஹிந்துத்துவா வாதிகள் முயற்சி செய்து வருகிறார்கள். அந்த முயற்சியின் அதிகாரப்பாட்டு குரலாக நிதியமைச்சரின் குரல் அவையில் எதிரொலிக்கிறது. நாகரிகத்தின் அடிப்படை அடையாளம் செங்கலும், பானையும் கண்டுபிடித்ததில் இருக்கிறது. ஆனால் வேதத்தில் செங்கலையும் பானையையும் செய்பவர்கள் அசுரர்கள் என்று வசைபாடப்படுகிறார்கள். பின் எப்படி உங்களை நாகரிகவாதி என்று உரிமைகொண்டாடுகிறீர்கள்? உங்களுக்கும் சிந்துவெளிப் பண்பாட்டுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? சடங்குகளுக்காக ஆங்காங்கே கற்களையும் சுடாத செங்கலையும் பயன்படுத்தி ஹோமம் செய்து, பின்னர் கலைத்துவிட்டுப் போகிற பழக்கத்தை தான் வேத காலத்தில் பார்க்க முடிகிறது. சடங்குகள் பற்றிய வேத இலக்கிய குறிப்பில் சதபத பிராமனத்தில் அக்னிசேனா என்ற சடங்குக்குத்தான் முதன் முதலில் செங்கலைப்பற்றிய குறிப்பே வருகிறது. அதற்க்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி நாகரிகத்தில் சுட்ட செங்கல் பயண்பாட்டுக்கு வந்துவிட்டது. இன்றைய கீழடி கண்டுபிடிப்பிலும் சுட்டசெங்கல் பயண்பாட்டினை பார்க்க முடியும். எனவே இது வரை நிரூபிக்கப்பட்ட வரலாற்றினை புராணங்களோடு இணைத்து உங்களின் கதைகளை தேசத்தின் வரலாறாக மாற்ற நினைக்காதீர்கள். நீங்கள் அறிவித்துள்ள ஆதிச்சநல்லூருக்கான தொல்லியல் திட்டத்தையும் இந்தப் பிண்ணனியை விலக்கிவிட்டுப் பார்க்கமுடியவில்லை. அவ்வை தனது ஆத்திச்சூடியில் “மண் பறித்து உண்ணேல் என்பாள். வரலாறும், பண்பாடும் கொண்ட மனிதக்கூட்டத்தின் வாழ்விடம்தான் மண். அதனை ஒரு போதும் அதிகாரத்தால் பறித்துவிட முடியாது.” என்று தெரிவித்திருந்தார். ஆதிச்சநல்லூரைக் குறிப்பிட்ட நிதிநிலை அறிக்கை ஏன் கீழடியை குறிப்பிடவில்லை ஓ கீழடி தமிழர் தாய்மடி என்று உலகம் ஒப்புக்கொண்டுவிட்ட காரணத்தினாலா? ஆதிச்சநல்லூருக்கு காவி பூசப்பட்டுவிடுமோ என்று தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆகா! ஆதிச்சநல்லூருக்கு அருங்காட்சியகமா! என்று மகிழ்ந்திருந்த வேளையில், அறிஞர்களும், ஆய்வாளர்களும், தமிழகப்பாராளுமன்ற உறுப்பினர்களும், ஹிந்துத்துவா வாதிகளின் ‘சரஸ்வதி சிந்தசமவெளி நாகரிகம்’ சொற்பயன்பாட்டை மேற்கோள் காட்டி, ஆதிச்சநல்லூருக்கு காவிபூசி விடுவார்கள் என்ற ஐயத்தை வெளிப்படுத்தியிருப்பது, இந்தக் கொடுமை நடந்துவிடக் கூடாதே என்ற அச்சத்தை நம்முள் விதைத்திருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



