Show all

உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 1,26,315 பேருக்கு கொரோனா!

உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 1,26,315 பேருக்கு கொரோனா! நீட் வைத்து மருத்துவத்திற்கு மாணவர்களை வடிகட்டும் அறிவாளிகள் எங்கே போனார்கள்?

26,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 1,26,315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,29,26,061 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 166,892 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 13.36 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 28.98லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா பாதிப்பில் இருநது 10.77 கோடி பேர் மீண்டனர். கொரோனா பாதிப்புடன் தற்போது உலகம் முழுவதும் 2.29 கோடி பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

ஒரு நாள் பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு அடுத்து பிரேசிலும், அமெரிக்காவும் உள்ளன. ஒரு நாள் உயிரிழப்பில் பிரேசில், அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது. மொத்த பாதிப்பில் இந்தியா வேகமாக முன்னேறிவருவதால் விரைவில் பிரேசிலை முந்த வாய்ப்பு உள்ளது.

இந்தியாவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 90,973 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனா பாதித்தவரகள் எண்ணிக்கை 13,197,031 ஆக உயர்ந்துள்ளது. உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அளவாக பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 3,733 பேர் மரணம் அடைந்தனர். இதனால் பிரேசிலில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 341,097 ஆக உயர்ந்துள்ளது

இந்தியா பிரேசிலை அடுத்து அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 73,253 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதித்தவரகள் எண்ணிக்கை 31,635,313 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 837 பேர் மரணம் அடைந்தனர். அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 571,097 ஆக உயர்ந்துள்ளது,

அமெரிக்கா, இந்தியா, பிரேசில் தவிர போலந்து, இத்தாலி, மெக்ஸிகோ, உக்ரைன், பிரான்ஸ் ரஷ்யா, பெரு, ஜெர்மனி போன்ற நாடுகளில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. இதேபோல் துருக்கி, அர்ஜெண்டினா, ஈரான், உக்ரைன், ஜெர்மனி, போலந்து, இத்தாலி, கொலம்பியா ஆகிய நாடுகளில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.