Show all

ஜப்பானில் கோவிட்-19 பாதிப்பில் ஒருவர் பலியானார்! இது அந்நாட்டில் கோவிட்-19க்கு முதல் பலி என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

ஜப்பானில் 250 பேர் கோவிட்-19 அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஜப்பானில் நிறுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் 218 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜப்பானில் கோவிட்-19 பாதிப்பில் ஒருவர் பலியானார். இது அந்நாட்டில் கோவிட்-19க்கு முதல் பலி என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜப்பானில் கோவிட்-19 தாக்குதலுக்கு ஆளான ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது, ஜப்பானில் கோவிட்-19க்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் 250 பேர் கோவிட்-19 அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஜப்பானில் நிறுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் 218 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவில் கடந்தாண்டு இறுதியில், தொடங்கிய கொரோனா நுண்ணுயிரி தொற்று தொடர்ந்து பரவி வருகிறது. இந்தக் கொடிய நுண்ணுயிரி தாக்கி பலியானோர் எண்ணிக்கை 1,355 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 42,200 பேர் கொரோனா நுண்ணுயிரி பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த கொரோனா நுண்ணுயிரிக்கு, உலக நலங்குத்துறை அமைப்பு, கோவிட்-19 என, அதிகாரப்பாடாக பெயர் வைத்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் தான் இந்த கோவிட்-19 முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் தொடங்கி ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த நுண்ணுயிரித் தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும், சீனாவிலிருந்து திரும்பிய கேரள மாணவிக்கு கோவிட்-19 பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

கேரள மாணவி தற்போது குணமடைந்துள்ளார். இந்த கோவிட்-19 தொற்றில் குணமானதாக இலங்கையிலிருந்து தகவல் வெளியானது. அது எந்த வகையான குணமளிப்பு என்று இதுவரை எந்தத் தகவலும் முன்னெடுக்கப்படவில்லை. 

இதனை அடுத்து வெளிவந்த செய்தி:- தாய்லாந்திலும் மொத்தம் 35 பேர் ஐயத்தின் பெயரில் சிகிச்சை பெற்று வந்ததில் 8 பேர் முழுவதுமாக சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இந்த மலைப்பும், மகிழ்ச்சியுமான செய்தியை தாய்லாந்து அரசு வெளியிட்டு இருந்தது.

இந்த கோவிட்-19 தொற்றுக்கு எச்ஐவி எதிர்ப்பு மருந்து மற்றும் வழக்கமான நுண்ணுயிரிக் காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தை பயன்படுத்தி உள்ளனர். லோபினாவிர், ரிட்டோனாவிர் என்ற கலவையான மருந்தை இதற்கு பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்டது. 

அடுத்து கேரளாவில் முதன்முதலில் கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நபர் கோவிட்-19லிருந்து முழுவதுமாகக் குணமாகிவிட்டார். ஆகவே இப்போதைக்கு இந்தியாவில் இன்னும் இருவருக்கு மட்டுமே கோவிட்-19 பாதிப்புள்ளது என்பது நேற்று வெளியான செய்தியாகும். 

கேரள குணப்பாட்டில் உலகம் கவனமெடுத்தால், உறுதியாக கோவிட்-19க்கு மருந்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் கேரளம் உலக மருத்துவங்களில் இருந்து மாறுபட்ட இந்திய மருத்துவத்திற்கான மண். உறுதியாக இதில் மாறுபட்ட மருந்து கிடைக்கக் கூடும். இந்திய நலங்குத்துறை நம்பிக்கையோடு முனையலாம். 

இந்நிலையில் கோவிட்-19 குறித்து கண்காணிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக  இந்திய அரசின் நலங்குத்துறை அறிவித்துள்ளது. கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு, ஆய்வு போன்ற பணிகளை உயர்மட்ட குழு மேற்கொள்ளுமாம். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.