சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள குடிசைப் பகுதிகளை மறைக்கும் வகைக்கு ஏழுஅடி உயரத்துக்கு அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் ஒன்றை அகமதாபாத் மாநகராட்சி கட்டிவருகிறது. மக்களின் ஏழ்மை நிலையை டிரம்ப் பார்க்கக் கூடாது என்பதற்காக இந்தச் சுவர் கட்டப்படுகிறதாம். 01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்கக் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் 12,13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121 ஆகிய நாட்களில் (24,25.02.2020) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த தகவலை வெள்ளை மாளிகை முந்தாநாள் அதிகாரப்பாடாக அறிவித்தது. இந்தியா வரும் குடியரசுத் தலைவர் டிரம்பையும் அவரது மனைவியையும் வரவேற்கும் விதத்தில் வெளியுறவு அமைச்சக கீச்சுப் பக்கத்தில் வீடியோ பதிவுகளை வெளியிட வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும், டிரம்பை வரவேற்று பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். டிரம்புக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு குஜராத் மாநில அரசும், இந்திய அரசும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள குடிசை வாரிய குடியிருப்புகளை மறைக்கும் வகையில் ஏழு அடி உயரத்துக்கு அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் ஒன்றை அகமதாபாத் மாநகராட்சி கட்டிவருகிறது. அகமதாபாத்திலிருந்து காந்திநகர் நோக்கி செல்லும் திசையில் சுவர் கட்டப்பட்டுள்ளது. அந்த குடிசைவாரியக் குடியிருப்பில் பத்துவருடங்களுக்கும் மேலாக 500 வீடுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். மக்களின் ஏழ்மை நிலையை டிரம்ப் பார்க்கக் கூடாது என்பதற்காக இந்தச் சுவர் கட்டப்படுகிறதாம். சீனா திடீரென்று பத்து நாட்களில் ஆயிரம் படுக்கை கொண்ட மருத்துவமனை கட்டியது போல- தமிழகத்தில் குடிசைமாற்று வாரியமாக தமிழகத்தின் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை, தமிழக திமுக, அதிமுக அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு கட்டி இருப்பது போல- பதினெட்டு விழுக்காடு சரக்கு சேவை வரியில் நடுவண் பாஜக அரசு குஜராத் ஏழை மக்களுக்காக இந்த வாய்ப்பிலாவது அடுக்கு மாடிக் குடியிருப்புகளை உருவாக்கக் கூடாதா. அவர்கள் எல்லாம் மதஅடிப்படையில் கூட ஹிந்துக்கள் தாமே.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



