Show all

எச்சரிக்கும் கூகுள்! கொரோனா குறித்து போலியான தகவல்கள் ஆயிரக்கணக்கில் இணையத்தில் உலாவருவதாக

வலைத்தளத்தில் கொரோனா குறித்து உள்ள பதிவுகளில் ஏராளமான போலி கருத்துருக்கள் கொண்ட தகவல்களும் பதிவிடப்பட்டுள்ளன. இந்தப் போலியான, ஆபத்தான மற்றும் தவறான கருத்துருக்களை வலியுறுத்தும் பதிவுகளை, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூகிள் நீக்கம் செய்து வருகிறது. 

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி, ஒட்டு மொத்த உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில்- முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு குறித்த தகவல்களுக்கு மக்கள் இணைத்தை பெரிதும் நம்பி, கொரோனா  பற்றிய தகவல்களை வலைத்தளங்களில் தேடித் தேடி படித்து வருகின்றனர். 

வலைத்தளத்தில் உள்ள பதிவுகளில் ஏராளமான போலி கருத்துருக்கள் கொண்ட தகவல்களும் பதிவிடப்பட்டுள்ளன. இந்தப் போலியான, ஆபத்தான மற்றும் தவறான கருத்துருக்களை வலியுறுத்தும் பதிவுகளை, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூகிள் நீக்கம் செய்து வருகிறது. 

வலைத்தளத்தில் ஆபத்தான, போலியான மற்றும் தவறான தகவல்கள் கொண்டு மக்களைத் தவறாக வழிநடத்தும் கொரோனா நுண்ணுயிரி தொடர்பான பதிவுகளை அடையாளம் கண்டு நீக்கம் செய்து வருவதாக ஆல்பாபெட் மற்றும் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 

இதுவரை கொரோனா நுண்ணுயிரி தொடர்பான ஆயிரக்கணக்கான காணொளிகளை வலைத்தளத்திலிருந்து கூகிள் நீக்கம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாகவே கொரோனா தொற்று நோய்த் தொடர்பான ஆயிரக்கணக்கான போலி விளம்பரங்களைக் கூகிள் தடுத்துள்ளது என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 

கடந்த கிழமை மருத்துவ பொருட்கள், முகமூடிகள் மற்றும் சுவாசக் கருவிகளுக்கான அனைத்து விதமான விளம்பரங்களுக்கும் கூகிள் தற்காலிக தடையை விதித்துள்ளது. அதனைத்தொடர்ந்து, கொரோனா தொற்றைத் தடுக்க மருத்துவ அடிப்படையாக நிரூபிக்கப்படாத முறைகளை ஊக்குவிக்கும் காணொளிகளைக் கூகிள் வலைத்தளங்களில் தொடர்ந்து தேடிப் பிடித்து, தடுத்து, நீக்கம் செய்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.