நமது பெருமிதம் பழந்தமிழர் சேர்த்துச் சென்ற சொத்துக்கள்! நமது இழிவு இந்திய விடுதலைக்குப் பின்பாக காங்கிரஸ், பாஜக ஆட்சியாளர்கள் நம் தலைமீது சுமத்தியுள்ள கடன்கள். நாம் கற்றுக் கொள்ள வேண்டியது? தமிழர் நடுவண் தலைமைக்கு முயல்வது ஒன்றே தீர்வு என்பதை! 06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மக்களில் இருந்து சமத்துவ நெறியில் ஆட்சி புரிந்த நமது பழந்தமிழ் மன்னர்கள் நமக்கான சொத்துக்களைச் சேர்த்து வைத்துச் சென்றிருக்கின்றார்கள். இந்திய விடுதலைக்குப் பிறகு ஹிந்தி, ஹிந்துத்துவா ஆதிக்கத்தில் ஆட்சியை முன்னெடுத்த காங்கிரஸ், பாஜக ஆட்சியாளர்கள் நமக்கு தலைக்கு 1,09,503 கடனை சுமத்தி வைத்திருக்கின்றார்கள். தமிழன் சுந்தர் பிச்சை தலைமையில் சமத்துவ நெறியில் எண்ணிம உலகை ஆளும் கூகுள் போல, சமத்துவ நெறியில் இந்தியாவை உலகின் நனிசிறந்த நாடாய் முன்னெடுக்க தமிழர் நடுவண் ஆட்சிக்கு முனைவோம். நடுவண் ஆட்சிப் பணித்துறைக்கு முனைவோம், அறங்கூற்றுத்துறையில் நிறைவோம். சிறப்புகள் அடிப்படையில் பழந்தமிழர் சேர்த்துச் சென்ற சொத்துக்கள்: ஊர்கள் வரிசையில் பழந்தமிழர் சேர்த்துச் சென்ற சொத்துக்கள் கோயில்களாக பழந்தமிழர் சேர்த்துச் சென்ற சொத்துக்கள்: தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகியவற்றின், அப்போதைய மன்னர்களால் நிறுவப்பட்டுள்ள கட்டிடக்கலை அற்புதங்களை பார்க்கவென்றே சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து குவிகின்றனர். தாராசுரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருமணஞ்சேரி, திருக்கருக்காவூர் ஆகியன கட்டாயமாக சென்று வரக் கூடிய சில முதன்மைக் கோயில்களாகும். பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தமிழ்நாட்டின் கட்டிடக்கலைக்கு உன்னதமானதோர் சான்றாக, அற்புதமான சிற்ப வடிவங்களை கொண்ட கோயிலாக, உயரிய கட்டிடக்கலை அதிசயமாக விளங்குகிறது. அலைகளற்ற அமைதியான கடற்கரையில் அமைந்துள்ள இராமேசுவரம் கோயில், தமிழ்நாட்டில், பாடற்பொருள் சார்ந்த கோயில்கள், சுற்றுலாக்களில் முதன்மை இடம் வகிக்கின்றன. தஞ்சாவூரை சுற்றியுள்ள கோள்கள் கோயில்களுக்கு, நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆலங்குடி (வியாழன்), திருநள்ளாறு (சனி), கஞ்சனூர் (வெள்ளி), திருவேற்காடு (புதியம்), திருநாகேஸ்வரம் (பாம்பு), கீழ்பெரும்பள்ளம் (பாம்பு), சூரியனார் கோயில் திங்களூர் (நிலா) மற்றும் வைத்தீசுவரன் கோயில் (செவ்வாய்) ஆகியனவே அந்த ஒன்பது கோள்கள் கோயில்களாம். ஐந்திரக் கோயில்கள:; திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் ஆகியவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. காளஹஸ்தி மட்டும் ஆந்திரப் பிரதேசத்திற்கு சென்று விட்டது. தமிழ்க் கடவுளான முருகனின், அறுபடை வீடுகளான பழநி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, திருத்தணி மற்றும் சுவாமிமலை ஆகியவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு தனிச்சிறப்புடன், கோயில்களுள் ஐம்பொன்னாய் ஒளர்கின்றன. யுனஸ்கோ பட்டியலில் அமைந்துள்ள தமிழகத்தின் ஆறு வியப்புகளான பழந்தமிழர் சேர்த்துச் சென்ற சொத்துக்கள்: யுனெஸ்கோவின் அமைப்பு என்பது உலக பாரம்பரியங்கள் திட்டத்தின் அடிப்படையில் உள்ள ஒரு களம் ஆகும். இந்த அமைப்பின் நோக்கம் காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச் சின்னம், கட்டிடம் மற்றும் நகரம் இந்த வகைகளின் தொகுப்புகள் யுனெஸ்கோ பட்டியலில் இடம் பெறுகின்றன. அந்த வகையில் செந்தமிழ் நாட்டில் உள்ள யுனெஸ்கோவால் அங்கிகரிக்கப் பட்ட பாரம்பரிய சின்னங்களைப் பற்றி அறிவோம். உலக வியப்புகள் ஏழு என்றால், அந்த ஏழு வியப்புகள் தமிழகத்தில் உள்ளது என்பதற்கு சான்றாக யுனெஸ்கோ பட்டியல் அமைந்துள்ளது. இந்தியாவில் அதிக அளவு கோவிகள் மற்றும் சிற்ப கலை, கட்டிடகலை போன்ற அதிக வேலைபாடு கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். தமிழகம் கோவில் நகரம், பாரம்பரிய தளங்களுக்கு மிகவும் பேரறிமுகமானது. இந்தியாவின் மிகப் பெரிய சுற்றுலாத் தளமாக தமிழகம் திகழ்கின்றது. மேலும் இந்தியாவில் நாட்டின் அதிக அளவு சுற்றுலா வருவாய் தரும் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கின்றது. யுனெஸ்கோ பட்டியலில் உள்ள தமிழகத்தின் பாரம்பரிய சின்னங்கள்: 1. தஞ்சைப் பெரிய கோயில்: 2. ஐராவதேசுவரர் கோயில்: 3. கங்கைகொண்ட சோழபுரம் கோயில்: இந்த முதலாம் இராசேந்திரன் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும். 4. மகாபலிபுரத்தின் நினைவுச்சின்னங்களின் தொகுப்பு: 5. ஏழு கோவில்கள்: மாமல்லபுரத்தில் ஏழு கோவில் அமைப்புகள் இருந்தன என்ற பழைய செய்தி முற்றிலும் உண்மையே என்று கூறமுடியாவிட்டாலும், மேற்கண்ட கண்டுபிடிப்புகளின் விளைவாக, மாமல்லபுரம் பகுதியில் மாபெரும் கோவில் வளாகம் இருந்தது என்றும் கடல்கோள் காரணமாக அது பெரும்பாலும் மறைந்துவிட, இன்று ஒருசில கட்டடங்களே எஞ்சியுள்ளன என்பதும் தெளிவாகிறது. 6.குகைக் கோயில்: 7. நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து: இந்திய விடுதலைக்குப் பிறகு நடப்பு ஆட்சியாளர்களால் நடுவண் அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து நம் ஒவ்வொருவர் தலைக்கும் வாங்கியுள்ள கடன் 109503 ரூபாய் ஆகும். நடுவண் அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து நம் ஒவ்வொருவர் தலைக்கும் வாங்கியுள்ள கடன் 109503 ரூபாய். இந்தக் கடனை அடைக்க, உருப்படியாய் எந்தத் திட்டத்தையும் முன்னெடுக்க முயலாமல், தங்கள் பிறப்பிட நாடுகளில் இருந்து மதவாத அடிப்படையில் பலரை இறக்குமதி செய்ய குடியுரிமைத் திருத்தச் சட்டமும், நாற்பது ஆண்டுகளுக்;கு முன் இந்தியாவில் பிறந்த யாருக்கும் பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில், அவர்களையெல்லாம் பாரபட்சம் இல்லாமல் நாடற்றவர்கள் ஆக்கும் வகைக்காக தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையையும் முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன இந்த அரசுகள். ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5119 வரை (2018-ம் ஆண்டு செப்டம்பர்) இந்திய அரசு 82,03,253 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. அதுவும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பொதுக் கடன் 51.7விழுக்காடு இந்தியாவின் கடன் தொகை அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது. அதவாது இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து வாங்கிய கடன் அளவில் பாதி அளவுக்கு அதிகமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நடுவண் பாஜக அரசு கடன் வாங்கியிருப்பது தெரிய வருகிறது. இந்த ஆண்டு நடுவே, ஐ.நா அவை வெளியிட்ட மக்கள் தொகை கணக்குப்படி இந்தியாவின் மக்கள் தொகை 136.64 கோடி. இந்தியாவின் மொத்தக் கடன் 82,03,253 கோடி ரூபாய் என்றால், ஒவ்வொரு இந்தியக் குடிமகன் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது? ஒரு கணக்கை முன்னெடுத்தால் கிடைக்கும் விடை:- ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் தோராயமாக இருக்கும் கடன் தொகை 60,034 ரூபாய். உலக வங்கியில் வாங்கப்படும் கடன் தொகைக்கு 2 அல்லது 3 விழுக்காடு வட்டியாம். இதுவே உள்நாட்டுக் கடன் என்றால் வட்டி அதிகமாக இருக்கும் என்று தெரியவருகிறது. இந்திய அரசு அடிக்கடி கடன் வாங்குவதால், ஆண்டுதோறும் இந்தியா கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை மாறிக்கொண்டே இருக்கிறது. வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டித் தொகை எவ்வளவு என்பதற்கான விடை நடுவண் வரவுசெலவுத் திட்டத்தில் கிடைத்த வகையில்: உலக வங்கிக்கு கடந்த 2016-17 நிதியாண்டில் 5,144.26 கோடி ரூபாயும், 2017-18 நிதியாண்டில் 5,950.76 கோடி ரூபாயும் வட்டி செலுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல உள்நாட்டு கடன்களுக்காக 2016-17 நிதியாண்டில் 3,70,589.82 கோடி ரூபாயும் 2017-18 நிதியாண்டில் 4,04,131.58 கோடி ரூபாயும் வட்டியாக செலுத்தியுள்ளது. அடுத்து வரிவாங்கும் உரிமை, கல்வி உரிமை, அடையாள உரிமை, மண் உரிமை என்று அனைத்திலும் நடுவண் அதிகாரத்தால்- கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிற தமிழ் நாட்டுக் கடனுக்கு வந்தால்:- தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவுகள் 1,80,618.71 கோடி ரூபாயாகவும், வருவாய்ச் செலவினங்கள் 1,99,937.73 கோடி ரூபாயாகவும் இருக்கும். இதன் விளைவாக, 2018-2019 ஆம் ஆண்டிற்கு வருவாய்ப் பற்றாக்குறை 19,319.02 கோடியாகும். தமிழ்நாட்டின் 2020 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31 அன்று, நிகர நிலுவைக் கடன்கள் 3,97,495.96 கோடி ரூபாயாக இருக்கும். என்று தெரியவருகிறது. தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். 2018 ஆண்டளவில் தமிழகத்தின் மக்கள் தொகை 80351195 என்பதாகத் தெரியவருகிறது. ஒவ்வொரு தமிழனின் (இந்தியக் குடிமகனின்) தலைக்கும் தோராயமாக 60,034 ரூபாய் இந்திய அரசு கடன் வாங்கியிருக்கிறது. தமிழக அரசோ 49469 ரூபாய் கடனாக வாங்கியுள்ளது. இரண்டு அரசுகளும் சேர்ந்து ஒரு தமிழன் தலைக்கு 109503 ரூபாய் கடனாக வாங்கியிருக்கிறது. இந்தக் கடனை அடைப்பதற்கு உருபடியான திட்டம் எதையாவது நடுவண் பாஜக அரசு முன்னெடுக்குமானால் தலைவணங்கி பாராட்டலாம். ஆனால் விடுதலை பெற்று 71வது குடியரசு நாள் கொண்டாடி முடித்திருக்கிறோம். கடந்த அறுபத்தி ஐந்து ஆண்டுகளில் வாங்கப் பட்ட கடனின் பாதி அளவிற்கு நடுவண் பாஜக அரசு இந்த ஐந்து ஆண்டுகளில் நம் தலைமீது விதித்திருக்கிறது. இந்த நிலையில், கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், தங்கள் பிறப்பு நாடுகளில் இருந்து மதவாத அடிப்படையில் பலரை இறக்குமதி செய்ய குடியுரிமைத் திருத்தச் சட்டமும், நாற்பது ஆண்டுகளுக்;கு முன் இந்தியாவில் பிறந்த யாருக்கும் பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில், அவர்களையெல்லாம் பாரபட்சம் இல்லாமல் நாடற்றவர்கள் ஆக்கும் வகைக்காக தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையையும் முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதை எதிர்த்து முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் மீது திட்டமிட்ட கலவரத்தைத் தூண்டி நாட்டின் சொத்துக்களை ஏரியூட்டிக் கொண்டிருக்கிறது. அந்த வகைக்கான கடனையும் நாம்தாம் சுமக்க வேண்டியிருக்கும். செயலலிதா மரணத்திற்குப் பின்பு, இந்த பாஜக ஒத்துழைப்பில் ஆட்சி பெற்றிருக்கிற தமிழக எடப்பாடி அரசு, நடுவண் பாஜக அரசின் தேவையற்ற முன்னெடுப்புகளுக்கு பணிந்து ஒத்துழைத்துக் கொண்டிருக்கிறது. இந்த அழகில் கொரோனா தற்போதைய தலைவலி தமிழகத்திற்கு. முழுக்க முழுக்க மற்ற மாநில மக்களின் வரைமுறையற்ற வரவுகளே தமிழகத்தில் கொரோனாவை எதிர் கௌ;வதில் மிகப் பெரிய சிக்கலாக அமைந்துள்ளது. உணவுக் கட்டுபாடற்ற உலகமும், தூய்மை நடவடிக்கையில்லாத வடஇந்திய கலாச்சாரமும் கெரோனாவை நமது மாநிலத்திற்கு பரப்பி அறச்சிக்கலில் நம்மை ஆழ்த்துகிறது.
♣ உலகின் தொன்மையான மொழி தமிழ்
♣ பத்துப்பாட்டு, எட்டுத்தொகை சங்கத் தமிழ் இலக்கியங்கள்
♣ சித்த மருத்துவம்
♣ சதிர் ஆடற்கலை
♣ சல்லிக்கட்டு
♣ மிக நீளமான (760 கி.மீ) காவிரி ஆறும் கழனிகளும்
♣ உலகின் முதல் அணைக்கட்டு- கல்லணை
♣ மிகப்பெரிய கோயில் தஞ்சை பெரிய கோயில்
♣ தமிழக நெற்களஞ்சியம் தஞ்சாவூர்
♣ மிக உயரமான கோபுரம் திரு வில்லிபுத்தூர்
♣ மிகப்பெரிய தேர் திருவாரூர் தேர்
♣ கோயில் நகரம் மதுரை
♣ ஆயிரம் கோயில்களின் நகரம் காஞ்சிபுரம்
♣ ஏரிகள் நிறைந்த மாவட்டம் காஞ்சிபுரம்
♣ முத்து நகரம் தூத்துக்குடி
♣ மலைக்கோட்டை
♣ செங்கல்பட்டு - ஏரிகள், வேடந்தாங்கல், மாமல்லபுரம் சிற்பங்கள்.
♣ திருவள்ளூர் - திருப்பனி முருகன், பழவேற்காடு ஏரி
♣ வேலூர் - கோட்டை
♣ ஈரோடு- கொடுமுடி கோயில்கள்.
♣ மதுரை - மீனாட்சியம்மன் கோவில்
♣ திருச்சி - பாறை கோட்டை, திருவரங்கம்
♣ தஞ்சை - பெருவுடையார் கோயில்,
♣ புதுக்கோட்டை - சித்தன்னவாசல் ஓவியங்கள்
♣ விழுப்புரம் - செஞ்சி கோட்டை
♣ அரியலூர் - கங்கை கொண்ட சோழ புரம்
♣ திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோயில், பார்வதமலை
♣ திருவாரூர் - கோயில், தேர், முத்துப்பேட்டை குளம்
♣ தூத்துக்குடி - திருச்செந்தூர் முருகன் கோயில்
♣ கன்னியாகுமரி - பத்மநாபபுரம் அரண்மனை.
தமிழ்நாட்டின் கோயில்கள், தமிழ்நாடு சுற்றுலாவின், முத்திரை பதித்த மிக முதன்மையான தலங்களாகும். இங்குள்ள கோயில்களின் கோபுரங்கள் உயர்ந்தோங்கிய வண்ணம், தேர்ந்த சிற்ப வேலைப்பாடுகளும், அடுக்கடுக்கான ஓவிய வேலைப்பாடுகள் மற்றும் வடிவங்களும் கொண்டவையாக மிளிர்கின்றன.
தஞ்சாவூரிலுள்ள காவரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது தஞ்சைப் பெரிய கோயில். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோவிலின் கட்டிகலை தமிழர்களின் சிறப்பு மிக்க அற்புதமான கலைக்கு சான்றாக விளங்குகிறது. இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோவிலின் கட்டிகலை தமிழர்களின் சிறப்பு மிக்க அற்புதமான கலைக்கு சான்றாக விளங்குகிறது. இந்த கோயிலுக்கு 1010 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் புதுமை மாறமால் காட்சி அளிக்கின்றது.
ஐராவடேஸ்வரர் கோயில் தாராசுரம் நகரில் அமைந்துள்ளது. இந்த திருத்தளம் தஞ்சாவூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இரண்டாம் இராசராச சோழரால் கட்டப்பட்டது.
கங்கைகொண்ட சோழபுரம் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை கட்டினான்.
மாமல்லபுரம் தமிழ் நாட்டில் காஞ்சிபுர மாவட்டித்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் தமிழ் நாட்டில் முதல் கட்டுமான கோவிலாகும். தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 பழமையான சின்னங்களுள் ஒன்றாகும். இக்கோயில் 45 அடி உயரம் கொண்டது.
மாமல்லபுரம் ஏழு கோவில்களின் நிலம் என்று செல்லப்பெயர் பெற்றது. 7 கோவில்களில், மற்ற ஆறு கோயில்கள் சோழமண்டல கடற்கரையில் மூழ்கியுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் சோழமண்டல கடற்கரை பகுதியில் உள்ள மலை உச்சியில் மாமல்லபுர குகைக் கோயில்கள் அமைந்துள்ளது. இந்த கோவிலை மண்டபங்கள் அல்லது குடவரை குகை கோவில் என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன.
வராக மண்டபம், ஆதிவராக மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியவற்றுள்ள் சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன. ராமானுச மண்டபத்தில் உருவாக்கப்பட்ட சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் பிற்காலத்தில் மதக் காழ்ப்புணர்ச்சி கொண்டோரால் செதுக்கி அழிக்கப்பட்டிருக்கிறது.
நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து ஆங்கிலேயர்களால் இப்பாதை உருவாக்கப் பட்டது. எனவே இதை பழந்தமிழர் சேர்த்துச் சென்ற சொத்துக்கள் தொடர்பில் சேர்த்துக் கொள்ள வேண்டியதில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



