24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக பணக்காரர்கள் பட்டியலில், முகநூல் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலக பணக்காரர்கள் குறித்த அறிக்கையை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டது. இதில் முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெஜோசும், 2வது இடத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில் கேட்சும் உள்ளனர். இந்த பட்டியலில், தொழிலதிபர் வாரன் பப்பெட்டை பின்னுக்கு தள்ளி, முகநூல் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் முன்னேறியுள்ளார். அவரது சொத்து மதிப்பு 5.61 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இது பப்பெட் சொத்தை விட 2,565 கோடி ரூபாய் அதிகமாகும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,842.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



