24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சியில் முன்னாள் முதல்வர் செயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளருமான ஜெ.தீபா செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியபோது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கினார். ஓ.பன்னீர்செல்வம் அரசியல் ரீதியாக என்னை ஏமாற்றிவிட்டு என்னிடம் இருந்த தொண்டர்களை அவரது பக்கம் இழுத்துக்கொண்டார். இதனால்தான் அவருடைய கட்சியில் செல்வாக்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முதல்வர் பழனிசாமியின் ஆட்சி நீடிக்கும் பட்சத்தில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். நடுவண் அரசிலும், மாநிலத்திலும் சர்வாதிகார ஆட்சி தான் நடந்து வருகிறது. மக்களவை மற்றும் சட்டமன்றத்திற்கு தேர்தல்கள் நடக்குமா? என்பதே சந்தேகமாக உள்ளது. இவ்வாறு ஜெ.தீபா கூறினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,842.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



