24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆளுநர் அதிகாரம் தொடர்பாக டெல்லி உச்சஅறங்கூற்றுமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது. உச்ச அறங்கூற்றுமன்றம்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அங்கு கூடுதல் அதிகாரம் உள்ளது. துணை நிலை ஆளுநர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். அந்த அரசு எடுக்கும் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் எதுவும் கிடையாது. அமைச்சரவையில் பரிந்துரை படிதான் செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதையடுத்து, அமைச்சரவை எடுக்கும் முடிவை அனுப்ப வேண்டுமே தவிர அதில் கை வைக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் கிரண்பேடியின் பார்வைக்காக மட்டுமே இனி கோப்புகளை அனுப்புவோம். அதேபோல புதுச்சேரி மாநிலத்துக்குட்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்கு ஆளுநர் கிரண்பேடிக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடும் அதிகாரம் அவருக்கில்லை. அரசியல் சாசனத்தின் தீர்ப்பு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுபவர்கள் மீது நானே வழக்குத் தொடருவேன். என்று தெரிவித்திருந்தார் முதல்வர் நாராயணசாமி. ஆளுநராகப் பதவியேற்றதில் இருந்து கிழமை இறுதி நாள்களில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்கு அரசுத் துறையின் உயர் அதிகாரிகளுடன் மிதிவண்டியில், ஆய்வுக்குச் செல்வது ஆளுநர் கிரண்பேடியின் வழக்கம். ஒவ்வொரு கிழமை இறுதி நாள்களிலும் அதைத் தவறாமல் கடைப்பிடித்து வருகிறார். அதன்படி இன்று காலை மிதிவண்டியில் ஆய்வுக்குச் சென்றார் கிரண்பேடி. ஆனால், வழக்கத்துக்கு மாறாக அவருடன் துறை அதிகாரிகள் யாருமே செல்லவில்லை. வனத்துறையின் இயக்குநர் குமார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே அவருடன் சென்றனர். உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி முதல்வர் நாராயணசாமி போட்ட வாய்மொழி உத்தரவு காரணமாகவே அதிகாரிகள் கிரண்பேடியை புறக்கணித்ததாக தெரிவிக்கின்றனர் ஆளுங்கட்சியினர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,842.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



