வளர்நாடுகள்7 மாநாட்டில் பங்கேற்க, தலைமைஅமைச்சர் நரேந்திர மோடிக்கு டொனால்ட் டிரம்ப் அழைப்பு. நம்மா மோடியின் அமெரிக்கப் பயண நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 21,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தேடித் தேடி, ஓடி ஓடி உலகஞ் சுற்றி வந்த மோடி, கொஞ்ச நாட்களாக இந்தியாவிலேயே இருப்பது யாருக்கும் வியப்பைத் தரவில்லை. காரணம் கொரோனா என்பது பச்சைப் பிள்ளைக்கும் தெரியும். ஆவணி- புரட்டாசியில் (செப்டம்பர்) திட்டமிடப்பட்டிருக்கும் வளர்நாடுகள்7 உச்சி மாநாட்டில் பங்கேற்க தலைமைஅமைச்சர் நரேந்திர மோடிக்கு அதிபர் டிரம்ப் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் வளர்நாடுகள்7 அமைப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளின் அதிபர்கள், தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி பொருளாதாரம், வணிகம், உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசுவர். இந்த மாநாட்டை இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் மாறி மாறி நடத்தும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாநாட்டை அமெரிக்கா நடத்த வேண்டும். இந்த மாநாடு, அடுத்த கிழமை அமெரிக்காவில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாநாட்டை ஒத்திவைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்த மாநாட்டில் இந்தியா, தென்கொரியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களை அழைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். வளர்நாடுகள்7 மாநாட்டை நடத்தும் நாடுகள் மற்ற நாடுகளைச் சேர்ந்த சில நாடுகளின் தலைவர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க முடியும். அந்த வகையில் டிரம்ப் மேற்கண்ட நாடுகளின் தலைவர்களை அழைக்க முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியுடன் நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது வளர்நாடுகள்7 மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த உரையாடலின் போது இந்திய- சீன பிரச்சினை குறித்தும் கொரோனா நுண்ணுயிரி பாதிப்பு உள்பட பல்வேறு பாடுகள் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு இன்னும் முழுமையாக மூன்று மாதங்கள் இடையில் உள்ளன என்றபோதும்கூட, கொரோனா பாதிப்பு முடிவுக்கு வருமா என்று சொல்லமுடியாது. நம்மா மோடியின் அமெரிக்கப் பயண நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதுவும் குறிப்பாக தமிழகத்தில்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



