கொரோனா போன்று ஒரு நோய், உலகளாவி பரவிவிடக் கூடாது என்பதற்காக, வெட்டியாக உலக நலங்கு நிறுவனம் என்ற ஒரு அமைப்பபை நிறுவி வைத்திருக்கிறது உலகம். அது கூடுதல் நன்கொடை கொடுப்பவர்களுக்கு எடுப்பார் கைப்பிள்ளையாக, கொரோனா முன்புவரை அமெரிக்காவையும், கொரோனாவிற்கு பின்பாக சீனாவையும் சார்ந்து நிற்கிறது. 21,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரி வெளிப்ட்டது சீனாவின் உகான் நகரில்- நாளது 15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121 (01.12.2019) அன்று. கடந்த 6 மாத காலத்தில் உலகில் உள்ள 200 நாடுகளுக்கும் பரவி உலகை கதிகலங்க வைத்து வருகிறது கொரோனா. உலகம் முழுவதும் கொரோனாவில் பாதித்தவர்கள் 62.3இலட்சம் அதில் உயிர்பலி சோகம் 3.8இலட்சம். கொரோனா தொற்றின் தொடக்;கம் சீனா என்றால் அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிற நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு 18 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உள்ளது. 1 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கிறார்கள். இதுபோன்று ஒரு நோய், உலகளாவி பரவிவிடக் கூடாது என்பதற்காக, வெட்டியாக உலக நலங்கு நிறுவனம் என்ற ஒரு அமைப்பபை நிறுவி வைத்திருக்கிறது உலகம். அது கூடுதல் நன்கொடை கொடுப்பவர்களுக்கு எடுப்பார் கைப்பிள்ளையாக, கொரோனா முன்புவரை அமெரிக்காவையும், கொரோனாவிற்கு பின்பாக சீனாவையும் சார்ந்து நிற்கிறது. கொரோனா பற்றிய உண்மை தகவல்களை மூடி மறைப்பதற்கு சீனாவுக்கு ஆதரவாக உலக நலங்கு நிறுவனம் செயல்பட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அந்த அமைப்புக்கான தனது நிதியை நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் அதிரடியாக கடந்த கிழமை உலக நலங்கு நிறுவனத்துடனான தனது உறவை அமெரிக்கா துண்டித்துள்ளது. அந்த நிறுவனத்துக்கு வழங்கி வந்த பெருந்தொகையை நிறுத்திக்கொண்டு, அதை தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்போவதாக டிரம்ப் அறிவித்ததார். இது உலக அரங்கை அதிர வைத்தது. கொரோனா நுண்ணுயிரி நடப்புகளில் இதுவரை சீனாவுக்கு வெளிப்படையாக உலக நலங்கு நிறுவனம் ஆதரவு அளித்தது. உலக அரங்கில் சீனாவை பாராட்டியும் வந்தது. குறிப்பாக கொரோனா நுண்ணுயிரிக்கு எதிராக சீனா விரைவான பதிலடி கொடுத்தது- கொரோனா மரபணு வரைபடத்தை பகிர்ந்து கொண்டது என்றெல்லாம் பாராட்டி மகிழ்ந்தது, உலக நலங்கு நிறுவனம். ஆனால் உண்மை அதுவல்ல என்று நிரூபித்துக்காட்டுகிற வகையில் இப்போது அதிர்ச்சியூட்டும் சில உண்மை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கொரோனா நுண்ணுயிரித் தொற்றுக்கான சோதனைகள், மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவற்றை வடிவமைப்பதற்கு தேவையான விவரங்களை சீனா பகிர்ந்து கொள்ளாமல், பல அரசாங்க ஆய்வகங்கள் முழுமையாக கொரோனா நுண்ணுயிரி மரபணு வரிசைகளை கண்டறிந்த பின்னரே, அதை வெளியிட சீன அதிகாரிகள் முனைந்தனர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம், பொது நலங்கு அமைப்பினுள் தகவல்களை பகிர்ந்து கொள்ள சீனாவில் இருந்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள் தாம் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கண்டறிந்துள்ளது. சீன அரசின் உள் ஆவணங்கள், மின்னஞ்சல்கள் மூலம் இதை அந்த செய்தி நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாம். சீன ஆய்வுக்கூடம் ஒன்று 16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121 (01.01.2020) அன்று வெளியிட்ட பின்னர்தான், அரசு நலங்கு அதிகாரிகள் கொரோனா மரபணு வரைபடத்தை வெளியிட்டுள்ளனர். அப்படி இருந்தும், உலக நலங்கு நிறுவனத்துக்கு தேவையான விவரங்களை, தகவல்களை, வழங்காமல் மேலும் 2 கிழமைகளுக்கு இழுத்தடித்துள்ளனர். தை (ஜனவரி) மாதத்தில் நடந்த உலக நலங்கு நிறுவனத்தின் உள் கூட்டங்களில் செய்யப்பட்ட பதிவுகளில் இருந்து இந்த செய்தி நிறுவனத்துக்கு தெரிய வந்துள்ளது. கொரோனா நுண்ணுயிரி பரவலை அப்போது வியக்கத்தக்க அளவில் குறைத்திருக்க முடியுமாம். தாங்கள் பெற்றுள்ள பதிவுகள், சீனாவை வெளியரங்கில் பாராட்டிய உலக நலங்கு நிறுவனம், உள்ளுக்குள் கவலைப்பட்டதை காட்டுகின்றன என அந்த செய்தி நிறுவனம் கூறுகிறது. அதிலும், கொரோனா நுண்ணுயிரித் தொற்றால் எந்தளவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை மதிப்பிடுவதற்கான விவரங்களைக்கூட சீனா உரிய நேரத்தில் பகிர்ந்து கொள்ள வில்லை என்று உலக நலங்கு நிறுவனம் கருதி உள்ளது. சீனாவில் உள்ள உலக நலங்கு நிறுவனத்தின் உயர் அதிகாரியான டாக்டர் காடன் கலியா கூறும்போது, சீன அரசு தொலைக்காட்சியில் வெளியாவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகத்தான் (கடைசி நேரத்தில்) எங்களுக்கு அவர்கள் (சீன அரசு) அதை கொடுக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார். இப்போது இந்தத் தகவல்கள் உலக நலங்கு நிறுவனத்தின் மீதான பிடியை அமெரிக்கா இறுக்கியுள்ள நிலையில்தான் வெளியுலகுக்கு வந்துள்ளன என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஆனால் சீன அதிபர் ஜின்பிங், கொரோனா நுண்ணுயிரி பற்றிய தகவல்களை சீனா உலகுக்கும், உலக வர்த்தக நிறுவனத்துக்கும் எப்போதுமே சரியான நேரத்தில் வழங்கி வந்துள்ளது என்று குறிப்பிட்டு வந்துள்ளார் என்பதுவும் நினைவுகூரத்தக்கது. சர்வதேச சட்டங்கள், பொது நலங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை உலக நலங்கு நிறுவனத்துக்கு நாடுகள் வழங்க வேண்டும் என்று சொல்கின்றன. ஆனாலும் உலக நலங்கு நிறுவனத்துக்கு இதில் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடிய அதிகாரம் இல்லை. மாறாக உலக நலங்கு நிறுவனம், உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பை நம்பி இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. சீனாவுடன் உலக நலங்கு நிறுவனம் கூட்டணி அமைத்துக்கொண்டது என்பதைவிட, உலக நலங்கு நிறுவனம் இருட்டில் வைக்கப்பட்டிருந்தது என்று இந்த செய்தி நிறுவனம் கண்டறிந்து இருக்கிறது. கொரோனா நுண்ணுயிரியைப் பொறுத்தமட்டில் சீனா மிக குறைவான தகவல்களை மட்டுமே அளித்துள்ளது. ஆனால் சீனாவின் பெயர் கெட்டு விடாமல் நல்ல முறையில் திகழ்வதற்கு உலக நலங்கு நிறுவனம் முயன்றுள்ளது. கொரோனா நுண்ணுயிரி பற்றிய கூடுதலான தகவல்களை எப்படி சீன அதிகாரிகளைக் கோப்படுத்தாமல், சீன விஞ்ஞானிகளை பாதிக்காமல், சீனாவிடம் இருந்து கேட்டுப்பெற எப்படி அழுத்தம் தருவது என உலக நலங்கு நிறுவன அதிகாரிகள் கவலைப்பட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் உலக நலங்கு நிறுவனம் ஒரு அறிக்கையில், “எங்கள் தலைமையும், ஊழியர்களும் உறுப்பு நாடுகளுக்கு சம அளவில் தகவல்களை பகிர்ந்து கொடுப்பதில் இரவு, பகலாக உழைத்தனர். அரசுகளுடன் வெளிப்படையான உரையாடல்களில் ஈடுபட்டது” என்று கூறப்பட்டுள்ளது. சீனா நினைத்திருந்தால், கொரோனா நுண்ணுயிரி பரவலை அந்த நாட்டுக்குள்ளாகவே கட்டுப்படுத்தி இருக்க முடியும் என்ற டிரம்பின் கோபத்தின் உச்சம் இப்போது நம்பத்தகுந்தவையாக இருக்கின்றன!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



