26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட 7 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்துள்ளது. விமானம் கீழே விழுந்து விபத்து நேரிட்டுள்ளது. விபத்து நேரிட்ட இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என எத்தியோப்பியன் விமானச்சேவை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எத்தியோப்பிய தலைமைஅமைச்சர் அலுவலகமும் விபத்தை உறுதி செய்தது. விமானத்தில் பயணிகள் 149 பேர் இருந்து உள்ளனர். விமானிகள், பணியாளர்கள் என 8 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் சிக்கிய விமானத்தில் சென்றவர்களில் யாரும் உயிருடன் இல்லை என்று உள்ளூர் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விமானத்தில் 33 நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்து உள்ளனர் என தெரியவந்துள்ளது. விமானம் புறப்பட்டதும் செங்குத்தாக, வேகமாக சென்றபோது நிலையற்றதன்மை காணப்பட்டதாக தரவுகள் தெரிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எத்தியோப்பியா தலைமைஅமைச்சர் அபி அகமது இரங்கல் தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,087.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



