26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தல் நாள் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ இன்று அறிவித்தார். 17-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும் தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121 வியாழக்கிழமை (18.04.2019) தேர்தல் நடைபெறும் என்று கூறினார். அன்றைய நாளிலேயே காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்றார். இந்த நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121 வியாழக்கிழமை (18.04.2019) நடைபெறும். தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படும். வழக்கு நிலுவையில் இருப்பதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாது' என்றார். எடப்பாடி, பன்னீர் கூட்டணிக்கு ஆட்சியைப் பெற்றுத் தருவதற்காக, தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ததால் காலியான 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழக ஆட்சியையும், பாராளுமன்ற தேர்தல் நடுவண் அரசில் இனி பாஜக நிலைக்க முடியுமா என்பதையும் தீர்மானிக்க இருக்கும் நிலையில் தேர்தல் களம் மிக மிகச் சூடாகவே யிருக்கும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,087.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



