Show all

பாராளுமன்றத் தேர்தல் நாள் அறிவிப்பு! இறங்குமுக இருப்பு நாட்கள் 39 மட்டும்

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் நாள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தேர்தல் நாள் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். மக்களவைத் தேர்தல் ஏழு கட்டமாக நடத்தப்பட இருக்கிறது. அதன்படி 2-ம் கட்டமாக வாக்குபதிவு நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121 வியாழக்கிழமை அன்று (18.04.2019) தேர்தல் நடைபெறுகிறது. 

வாக்கு எண்ணிக்கை 10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120 செவ்வாய்க் கிழமை அன்று (23.04.2019) நடைபெறுகிறது.

வேட்புமனுத் பதிகை செய்ய கடைசி நாள்: 12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120 செவ்வாய்க் கிழமை (26.03.2019) 

வேட்பு மனு பரிசீலனை: 13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120 புதன் கிழமை (27.03.2019) 

மனுக்களை திரும்ப பெற கடைசி நாள்: 15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120 வெள்ளிக் கிழமை  (29.03.2019) 

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,087.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.