மொழிகள் என்பன, அந்த மொழிக்கான சமுதாயத்தின் அடிப்படையை எவ்வாறு கட்டமைக்க விரும்புகிறது என்பதை சொற்களின் கட்டமைப்பு முறைகளே அழகாகவும் தெளிவாகவும் விளக்குவதை அறிய முடிகிறது 28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மொழிகள் என்பன, அந்த மொழிக்கான சமுதாயத்தின் அடிப்படையை எவ்வாறு கட்டமைக்க விரும்புகிறது என்பதை சொற்களின் கட்டமைப்பு முறைகளே அழகாகவும் தெளிவாகவும் விளக்குவதை அறிய முடிகிறது இதனால்தான் இந்த சமஸ்கிருதம் படிப்படியாக பேசுவோர் எண்ணிக்கை குறைந்து, இந்தியாவின் நிருவாக மொழிகளாகப் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில் மிக மிக குறைந்த மக்களால் பேசப்படும் மொழியாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் சட்டமுன்வரைவை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மக்களவையில் பதிகை செய்தார். இந்தியா முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 40-ஐ மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்கி வருகிறது. இதற்கிடையே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தற்போது இயங்கி வரும் மூன்று சமஸ்கிருதப் பல்கலைகழகங்களை மத்தியப் பல்கலைக்கழகங்களாக மாற்ற, பாஜக அரசு முடிவு செய்தது. இதன் அடிப்படையில் டெல்லியில் உள்ள ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தான், ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம் மற்றும் திருப்பதியில் உள்ள ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம் ஆகியவை மூன்று நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மத்திய பல்கலைகழகங்களாக மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், பள்ளிகளில் சமஸ்கிருதம் ஒரு பாடமாக கற்றுத்தரும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்தமுறை எடுக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளி விவரப்படி, சமஸ்கிருதம் பேசுவோர் 24,821 மட்டுமே உள்ளனர். இவர்கள்தான் தங்கள் தாய் மொழி என சமஸ்கிருதத்தை குறிப்பிட்டுள்ளனர். போடோ, மணிப்பூரி, கொங்கணி மற்றும் டோக்ரி மொழி பேசுவோரைவிடவும், சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். ஆங்கிலம் தமிழோ -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,366.
கற்றுத்தருகிறவரையும்-கற்றுக்கொள்கிறவரையும்
சம்சுகிருதம்
குரு, சிஷ்யன் என்று சொல்லி
கற்றுத்தருகிறவரை குரு என்று உயர்வாகவும்
கற்றுக்கொள்கிறவரை சிஷ்யன் என்று தாழ்வாகவும் நடத்த வேண்டும் என்பதாக சம்ஸகிருத மொழிச்சமுதாயம் விரும்புவதை அறிய முடிகிறது. அந்த மாதிரியான ஆதிக்கத்தில் சமஸ்கிருதத்தை முன்னெடுத்த காரணமாகவோ என்னவோ சம்ஸ்கிருதம் பேச்சு மொழி நிலையில் இருந்து வழக்கொழிந்து போய்விட்டது. சமஸ்கிருதம் தேவபாஷை- தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகள் எல்லாம் நீசபாஷை என்று வேறு கருத்துப்பரப்புதல்.
Teacher-Student என்று சொல்லி
Teach கற்றுத்தருதல்
Study கற்றுக்கொள்ளுதல் என்று
கொடுத்தல், பெறுதல் என்று வகைமை நிலையாக பொருள் உணர்த்துகிறது.
ஆசிரியர்-மாணாக்கர் என்றுசொல்லி
ஆசு இரியர்-குற்றம்இல்லாதவர். மாண்புஆக்கர்-மாண்புகளை ஆக்கிக்கொள்கிறவர் என்று கற்றுத்தருகிறவர் குற்றம் இல்லாதவராக இருக்க வேண்டும் என்றும், அப்போதுதாம்
கற்றுக்கொள்கிறவர் மாண்புகளை ஆக்கிக்கொள்ள முடியும் என்றும், தமிழ் தமது அடிப்படைகளைச் சொற்களில் பொதிந்து இருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.