சுங்கம் தவிர்த்த சோழனைக் கொண்டாடி வந்த தமிழர்களுக்கு- வடஇந்திய மக்களின் வெறித்தனமான ஹிந்துத்துவா ஆர்வத்தின் காரணமாக- அவர்கள் மாநிலத்திற்கு மட்டும் ஆட்சியாளர்களாக இருக்க தகுதியுடையவர்களை நமக்குமாக தேர்ந்தெடுத்துக் கொடுத்ததால்- சுங்கக் கட்டணத்தை பிடுங்கிக் கொள்ளும் விரைவுக்கட்டு (பாஸ்டேக்) முறையை அமல்படுத்திய மோடி- என்று செயற்கை கொண்டாட்டத்திற்கு நாமும் தலைகொடுக்க வேண்டிய அவலத்திற்கு உள்ளாகியிருக்கிறோம் தமிழர்கள். 29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சுங்கம் தவிர்த்த சோழனைக் கொண்டாடி வந்த தமிழர்களுக்கு- வடஇந்திய மக்களின் வெறித்தனமான ஹிந்துத்துவா ஆர்வத்தின் காரணமாக- அவர்கள் மாநிலத்திற்கு மட்டும் ஆட்சியாளர்களாக இருக்க தகுதியுடையவர்களை நமக்குமாக தேர்ந்தெடுத்துக் கொடுத்ததால்- நள்ளிரவில் சரக்கு சேவை வரிவிதித்த மோடி- சுங்கக் கட்டணத்தை பிடுங்கிக் கொள்ளும் விரைவுக்கட்டு (பாஸ்டேக்) முறையை அமல்படுத்திய மோடி- என்று செயற்கை கொண்டாட்டத்திற்கு நாமும் தலைகொடுக்க வேண்டிய அவலத்திற்கு உள்ளாகியிருக்கிறோம் தமிழர்கள். ஆம்! இன்றுடன் முடிகிறது புதியதாக அமல்படுத்தப்பட்டுள்ள சுங்கச்சாவடி- விரைவுக்கட்டு (பாஸ்டேக்) இல்லாமல் பயணிப்பதற்கான நடைமுறை. பழைய நடைமுறையில் தொடர்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இனி சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அவ்வப்போது பணம் செலுத்தி கடக்கும் நடைமுறை கிடையாது. 150லிருந்து 5000 வரை முன்பணம் செலுத்தி ‘விரைவுக்கட்டு’ அட்டை பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். சுங்கக்கட்டணத்தை எண்ணிம முறையில் செலுத்த விரைவுக்கட்டு (பாஸ்டேக்) பெறுவதற்காக செய்த விண்ணப்பிப்பு திடீரென நீக்கம் ஆன நிருவாக முறை குளறுபடியால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். சுங்கக் கட்டணத்தை எண்ணிம முறையில் செலுத்த விரைவுக்கட்டு (பாஸ்டேக்) திட்டத்தை இந்திய பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. இன்றுடன் இதனை பெறுவதற்கான காலக்கெடு முடிவடைகிறது. பாஸ்டேக் இல்லை என்றால் கூடுதலாக சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், வாகன ஓட்டிகள் விரைவுக்கட்டு (பாஸ்டேக்) அட்டை பெற விண்ணப்பித்து பெற்று வருகின்றனர். பிளிப்கார்ட், அமேசான் போன்ற இயங்கலை தளங்கள் மூலமாகவும் இதனை பெறலாம் என்பதால், அந்த வழியாகவும் விண்ணப்பம் செய்து விரைவுக்கட்டு (பாஸ்டேக்) அட்டையை பெற்றுக்கொள்கின்றனர். இந்த நிலையில், இரண்டு கிழமைகளுக்கு முன்னம் விரைவுக்கட்டு (பாஸ்டேக்) முறைக்கு மாறுவதற்காக பேடிஎம் மூலம் விரைவுக்கட்டு (பாஸ்டேக்) அட்டைக்கு விண்ணப்பம் செய்த வாகன உரிமையாளர்களுக்கு நேற்று திடீரென்று நீங்கள் பதிவு செய்த விரைவுக்கட்டு (பாஸ்டேக்)அட்டைகான விண்ணப்பம் நீக்கம் ஆகிவிட்டதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால், இன்றைக்குள் அனைவரும் கட்டாயம் விரைவுக்கட்டு (பாஸ்டேக்) முறைக்கு மாறியாக வேண்டும் என இந்திய அரசு, தெரிவித்துள்ள நிலையில் இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கீச்சு வழியாக கேள்வி எழுப்பியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,367.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



