Show all

நல்லவேளை! தாங்கிப் பிடிக்கப்பட்டார் தலைமைஅமைச்சர் மோடி. சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்

கான்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நமாமி கங்கா குழுவின் முதல் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டபோது கால் இடறி விழ இருந்தார். தாங்கிப் பிடித்தனர் பாதுகாவலர்கள்

28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கான்பூரில் நமாமி கங்கா திட்டத்தின் அடுத்த கட்டம் மற்றும் புதிய செயல் திட்டம் குறித்து தலைமை மோடி தலைமையில் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் இந்திய அமைச்சர் பிரகலாத் படேல், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதல்வர் திருவனந்திர ராவத், பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் தலைமைஅமைச்சர் மோடி கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களுடன் கங்கை ஆற்றில் படகு பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். பயணத்தை முடித்த பின்னர் கப்பல் படியில் மோடி ஏறிய போது கால் தடுக்கி கீழே விழ, பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தாங்கி பிடித்து தூக்கினர். இதனால் அங்கு கொஞ்ச நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,366.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.