கொரோனாவால் உலகம் அல்லாடிக் கொண்டிருக்கிறது. கொரோனா மனித ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா? தன்னிச்சையானதா என்பதற்கான விடை காணும் வகைக்கான நேர்மை உலகினரிடையே இல்லை. இந்த நிலையில் நோபல் பரிசு சரியான நோக்கத்திற்கானதுதானா என்று அந்தக் குழுவில் இருப்பவர்கள் ஆய்வு செய்யலாம் 22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவால் உலகம் அல்லாடிக் கொண்டிருக்கிறது. கொரோனா மனித ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா? தன்னிச்சையானதா என்பதற்கான விடை காணும் வகைக்கான நேர்மை உலகினரிடையே இல்லை. காலம் மாறிவிட்டது. மனிதக் கண்டுபிடிப்புகளே மனிதனுக்கு மரணசாசனம் எழுதிக் கொண்டு வருகிறது. இந்த நிலையிலும் நோபல்பரிசு அதேமாதிரியான முயற்சிகளுக்கே வழங்கப்பட்டு வருகிறது என்பதை வேதியியல் ஆய்வுகளுக்கு இரண்டு பெண்மணிகளுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ள நோபல்பரிசு ஐயத்தைக் கிளப்புதாகவேயிருக்கிறது. நோபல்அறிஞர்- இந்த வகையான நோபல் பரிசு அறிவித்ததே உலகிற்கு ஒரு பிழையான கண்டுபிடிப்பை கொடுத்து விட்டோமே என்கிற குற்றஉணர்வில் நல்லது செய்வோம் என்கிற முனைப்பில் முன்னெடுத்ததுதாம் என்பது வரலாறு. பிரான்ஸ், அமெரிக்காவை சேர்ந்த பெண் இயல்அறிவர்களுக்கு வேதியியல் நோபல் பரிசு, மரபணுவில் புதுமை புகுத்தியமைக்காகவாம். வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண் இயல்அறிவர்களுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், 2020ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டது. இது, 2 பெண் இயல்அறிவர்களுக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. பிரான்சை சேர்ந்த இமானுவேல் சார்பெண்டிர், அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர் டவடனா ஆகியோர், இந்தாண்டுக்கான நோபல் பரிசு தட்டிச் சென்றுள்ளனர். செல்களின் மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் மற்றும் மரபணு தொடர்பான ஆய்வுகளுக்காக இந்த நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிஆர்ஐஎஸ்பிஆர் சிஏஎஸ் எனப்படும் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை இவர்கள் உருவாக்கி உள்ளனர். இதனை பயன்படுத்தி விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகளின் மரபணுக்களை மிக துல்லியமாக மாற்ற முடியும் என்று தெரியவருகிறது. அப்படி மாற்ற முடிகிற அறிவு நமக்கு ஆக்க வழிக்கு அல்லாமல் கொண்டு அழிவு வழிக்கும் கொண்டு சென்று விட்டு விடுமோ என்கிற ஐயத்தை கிளப்பியிருக்கிறது. காரணம்- கொரோனா உருவாக்கப்பட்டது ஆய்வகத்தில் இல்லை என்பதான நேர்மையான உறுதிப்பாடு இன்னும் வந்து சேரவில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



