Show all

சசிகலா தொடர்பானவர்களுக்கு! விடுதலைச் செய்தியை தொடர்ந்து வரும் முடக்கச் செய்தி

விடுதலைச் செய்தியில் மகிழ்ந்திருந்து நிலையில்- வருமான வரித்துறை சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக சசிகலா தொடர்பானவர்களுக்கு முரண் தகவலும் வெளியாகி அதிர்ச்சி வழங்கியுள்ளது. 

21,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சிறையிலிருந்து விடுதலையாக வாய்ப்பிருப்பதாக சசிகலா தொடர்பானவர்களுக்கு ஆதரவுத் தகவல் வெளியாகியிருந்தது. 

இந்தநிலையில், வருமான வரித்துறை சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக சசிகலா தொடர்பானவர்களுக்கு முரண் தகவலும் வெளியாகி அதிர்ச்சி வழங்கியுள்ளது. 

பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா உள்ளிட்ட ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சசிகலாவுக்குச் சொந்தமான 200 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, பல்வேறு சொத்துகள், பண பரிமாற்றம் ஆகியவை குறித்த ஆவணங்களைக் கைப்பற்றினர்களாம். அந்த ஆவணங்களைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்துவரும் வருமான வரித்துறையினர், பினாமி பெயர்களில் பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கிக் குவிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த ஆவணங்களின் அடிப்படையில் போயஸ் தோட்டத்தில் சசிகலா கட்டி வரும் புதிய கட்டடம் உள்ளிட்ட ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளைக் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் முடக்கினர். 77 நிறுவனங்கள் மூலம் வாங்கப்பட்டிருந்த சொத்துகளும் அப்போது முடக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குச் சொந்தமான ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், கோடநாடு பண்னை, சிறுதாவூர் மாளிகை உள்ளிட்ட சொத்துகளும் அடக்கம். இதுதொடர்பான அழைப்பாணை கர்நாடக சிறையிலிருக்கும் சசிகலா உள்ளிட்டோருக்கு நேற்று கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பினாமி தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.