நடிகை காஜல் அகர்வால் நாளது 14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122 வெள்ளிக்கிழமை (30.10.2020) தனது திருமணம் நடைபெற உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். 22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: காஜல் அகர்வால் இன்று தனது திருமணம் நடைபெறவுள்ள நாள் குறித்து அறிவித்துள்ளார். 35 அகவையில் உலாவரும் நடிகை காஜல்அகர்வால் நாளது 14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122 வெள்ளிக்கிழமை (30.10.2020) தனது திருமணம் நடைபெற உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். மாப்பிள்ளை பெயர் கவுதம் கிட்சுலு என்னும் தெரிவித்துள்ளார். திருமண நிகழ்வை மிகச் சிறிய அளவில் ஏற்பாடு செய்துள்ளதாகவும், திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடிக்க உள்ளதாகவும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். அத்துடன் “பல ஆண்டுகள் எனக்கு வழங்கிய அன்பிற்கு நன்றி. இந்த நம்ப முடியாத புதிய பயணத்திற்கு எங்களை வாழ்த்துங்கள். நீங்கள் விரும்புவதை தொடர்ந்து செய்வேன்” என்றும் தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சிகள் 2 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. காஜல் அகர்வால் மற்றும் கிட்சுலு கடந்த மாதம் திருமணத்திற்கான உறுதிப்பாடு ஏற்றதாகக் கூறப்படுகிறது. கிட்சுலு ஒரு தொழில் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



