Show all

கொரோனா குறித்து அச்சம் வேண்டாம்! உலக அளவில் இதுவரை 53,423 பேர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர்

உலக அளவில் இதுவரை 53,423 பேர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர் என்பதான அதிகாரப்பாட்டுத் தகவல் வெளியாகியிருக்கிறது. காய்சலுக்கு பாராசெட்டமால் என்று அனைவருக்கும் தெரிந்த மருந்தாக, கொரோனாவிற்கு என்று ஒரு மருந்து இல்லைதான். ஆனாலும் கொரோனா குணப்படுத்தப்பட வாய்ப்புள்ள நேயே. பல்வேறு சிகச்சை அடுக்குகளில் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா நோயைக் குணப்படுத்த முடிகிறது என்பதே உண்மை.

23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனா யுகான் நகரில் தோன்றிய கொரோனா நுண்ணுயிரித் தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை 95,748 பேர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 53,423 பேர்கள் நோயில் இருந்து குணமாகி உள்ளனர். 3286 பேர்கள் பலியாகி உள்ளனர். என்பதான தகவல் வெளியாகியிருக்கிறது.

கொரோனா என்பது சுவாச நோயாகும், இது நுரையீரல் மற்றும் காற்றுப்பாதைகளை பாதிக்கும். இது கொரோனா என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது.

உலகெங்கிலும் 87க்கும் மேற்பட்ட நாடுகள் இப்போது கொரோனா நோயை உறுதிப்படுத்தியுள்ளன. பரோயே தீவுகள் மற்றும் போலந்து இன்று தாக்கப்பட்ட அண்மைத்துவ நாடுகளாக மாறியுள்ளன. ஒரு சில ஐரோப்பிய நாடுகள் மட்டுமே நோய்பாதிப்பிருப்பதாக பதிவு செய்யவில்லை. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 31 ஆக உயர்ந்து உள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 9 அகவை வரையிலான சிறார்கள் யாருமே இல்லை. 10 முதல் 19 அகவை வரை உள்ளவர்கள் 0.2 விழுக்காடும், 20 முதல் 29 அகவை வரை உள்ளவர்கள் 0.2 விழுக்காடும், 30 முதல் 39 அகவை உள்ளவர்கள் 0.2 விழுக்காடும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்படைந்தவர்களில் 0.4 விழுக்காட்டினர் 40 முதல் 49 அகவை உள்ளவர்களாக இருக்கின்றனர். 50 முதல் 59 அகவையுள்ளவர்கள் 1.3 விழுக்காடாகவும், 60 முதல் 69 அகவையுள்ளவர்கள் 3.6 விழுக்காடாகவும் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள். கொரோனா பாதித்தவர்களில் 8 விழுக்காட்டு பேர் 70 முதல் 79 அகவைக்கு உட்பட்டவர்கள் ஆவர். அதிகபட்சமாக 80 அகவைக்கு மேற்பட்ட 14.8 விழுக்காட்டினர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீரிழிவு நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் போன்ற பிற நிலைமைகளைக் கொண்டவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளானால் கடுமையான சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

கொரோனா நுண்ணுயிரி சுவாசக் குழாயைப் பாதிக்கும் என்பதால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வறட்டு இருமல், மூச்சுத் திணறல் அல்லது நிமோனியாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து  பாதுகாப்பான தூரத்தை வைத்திருப்பது நல்லது. சோப்பு மற்றும் சூடான நீரில் ஒருவரின் கைகளை முழுமையாகவும் தவறாமல் கழுவுவதும் ஒரு முதன்மைத் தடுப்பு நடவடிக்கை. ஒருவரின் கைகளை உலர்த்தும்போது உடனடியாக  துண்டுகளைப் பயன்படுத்துவதும் சிறந்தது.

நோயாளியின் அறிகுறிகளை எதிர்கொள்ளும்போது காய்ச்சல் தொற்றுக்கும் சளிக்கும் உள்ள வேறுபாட்டைக்  கண்டறிய மருத்துவர்கள் கூட சிரமப்படுவார்கள்.

சளி, பெரும்பாலானவர்களுக்குத் தொண்டை புண், பின்னர் மூக்கு ஒழுகுதல் மற்றும் இறுதியில் இருமல் உருவாகிறது.  அதே போல் காய்ச்சல் மற்றும் தலைவலி ஆகியவை ஒரு நபரை பல நாட்கள் பாதிக்கக்கூடும், இதனால் அவர்கள் கவனக்குறைவாக இருப்பார்கள்.

இந்த நோய் தொற்றால்  காய்ச்சல் உங்களை ஒரே நேரத்தில் தாக்குகிறது:  காய்ச்சல்,  தலை மற்றும் கைகால்கள் வலி, வறட்டு இருமல் தொடங்குகிறது, ஒருவரின் குரல் கரகரப்பாகிறது,  தொண்டை வலி ஏற்படுகிறது மற்றும் அதிக காய்ச்சல் 105டிகிறி வரை, பெரும்பாலும் குளிருடன் உங்களை படுக்கையில் தள்ளும். பசி இருக்காது.

உலகம் முழுவதும் 20 குழுக்கள்  ஏற்கனவே தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன. சீன அதிகாரிகள் கொரோனா நுண்ணுயிரியின் டி.என்.ஏ குறியீட்டை வழங்கினர், இதனால் விஞ்ஞானிகள் நேராக இந்த ஆய்வில் ஈடுபட முடிந்தது. 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலே காற்றில் சுற்றித் திரியும் நோய் கிருமிகள் நம்மை  தாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்கினால் அது கிருமித்தொற்று, நுண்ணுயிரிகளோடு போராடி உடலைப் பாதுகாக்கும். இதற்காக பெரிதாக மெனக்கெட வேண்டாம். அன்றாடம் உண்ணும் உணவில் சரியாக கவனம் செலுத்தினாலே போதும்.

1. பல்வேறு இடங்களுக்குச் செல்வோர், அடிக்கடி கண்கள், மூக்கு, வாயை தொடக் கூடாது. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2 முறை குளிக்க வேண்டும். 
2. தொடர் சளி, இருமல் மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
3. நெருக்கமாக நின்று பேசுவதை தவிர்க்க வேண்டும். கூடுமானவரை குறைந்தபட்ச இடைவெளிவிட்டு நின்று பேசுங்கள். அடிக்கடி கைகளை தூய்மைப்படுத்தலாம்.
4. கட்டாயப் பணியின்றி வெளிநாடு, வெளிமாநிலம் செல்லாதீர்,கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும் 
5. விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில், அடிக்கடி கைபடும் இடங்களிலும், அழுக்காக உள்ள இடங்களிலும் கைகளை வைக்க கூடாது. என்பனவற்றை பாதுகாப்பு நடவடிக்கையாகப் பின்பற்றுங்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.