திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், பேராசிரியர் அன்பழகன் காலமானார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்பது முறை பொதுச் செயலராகவும், நிதித்துறை, நலங்குத் துறை மற்றும் கல்வித் துறை முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்த அன்பழகன், உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் நேற்று நள்ளிரவு காலமானார். 24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், பேராசிரியர் அன்பழகன் காலமானார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்பது முறை பொதுச் செயலராகவும், நிதித்துறை, நலங்குத் துறை மற்றும் கல்வித் துறை முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்த அன்பழகன், உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் நேற்று நள்ளிரவு காலமானார். 97 அகவையை தொட்டுவிட்ட அன்பழகன், அகவை முதிர்வு காரணமாக, கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு கிழமைக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு, சிறப்பு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு, மருத்துவமனைக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் சென்றார். அன்பழகனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் அன்பழகன் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அகவை முதிர்வு காரணமாக, அவரது உடல், மருத்துவ சிகிச்சையை ஏற்கவில்லை என, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவர், தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். நேற்று நள்ளிரவு, சிகிச்சை பலனின்றி, காலமானார். மறைந்த அன்பழகன் உடல் மருத்துவமனையில் இருந்த கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அவரது உடலுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் நினைவேந்தல் முன்னெடுத்தனர். 42 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 9 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார். திராவிட இயக்க உணர்வாளராகவும், சிந்தனையாளராகவும் விளங்கினார். திராவிட முன்னேற்றக் கழகத்தினை பேரறிஞர் அண்ணா அவர்கள் நிறுவிய போது அவருக்கு உறுதுணையாக இருந்தார். அன்பழகன் மறைவையொட்டி கட்சி சார்பில் 7 நாள் துக்கம் பின்பற்றப்படவிருக்கிறது. அண்ணா அறிவாலயத்தில் கட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது. கட்சி நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களை ஒரு கிழமைக்கு விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் உடல் பொதுமக்கள் நினைவேந்தலுக்காக கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் உடலுக்கு அவரது உறவினர்களும், திமுகவினரும் கண்ணீர் மல்க நினைவேந்தல் முன்னெடுத்து வருகின்றனர். மேலும், அன்பழகனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்தும் திமுக நிர்வாகிகள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அன்பழகன் உடலை ஏற்றி வந்த வாகனத்திற்கு முன்பும், பின்பும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் ஊர்வலமாக இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் அணி வகுத்தனர். திமுக முன்னணி நிர்வாகிகள் அனைவரும் அன்பழகன் இல்லத்தில் குவிந்துவிட்டனர். இதனிடையே தொண்டர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அன்பழகன் உடல் இன்று அடக்கம் செய்யப்படவுள்ளதால் அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் வரக்கூடும். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் ஏற்பாடு செய்து வருகிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



