உலகின் மிகப் பெரிய முதலாளித்துவ நாடுகள் எல்லாம் கூட, மிகப்பெரிய பணக்காரர்களுக்கும் மிக வறுமையான ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும் என்கிற சிந்தனையை ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அதற்கான உலகின் தேர்வு எண்ணிமச் செலாவணி. 05,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகின் மிகப் பெரிய முதலாளித்துவ நாடுகள் எல்லாம் கூட- மிகப்பெரிய பணக்காரர்களுக்கும் மிக வறுமையான ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும் என்கிற சிந்தனையை ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதற்காக அவர்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் பணப்புழக்கத்தை அதிகரித்து ஏழ்மையை ஒழிக்கும் நடவடிக்கைகளே. உலகத்திலேயே பொருளாதார ஏற்றதாழ்வின் இடைவெளி மிகமிக குறைந்த பகுதி என்னும் தேடலில் ஈடுபட்டால், கிடைக்கும் விடை தமிழகம் மட்டுமேயாகும். இந்த வகைக்கு தமிழகம் பின்பற்றும் வழி- சிறு குறு நடுதட்டு தொழிலும் வணிகமும் ஆகும். அதிலும் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து தமிழர்களிடையே பொருளாதார சமநிலையைப் பேணிவருகின்றன. இது சட்டத்தின் வழிவந்த அமைப்பு முறை அன்று. தமிழ் குடும்ப அமைப்புகளை மாதிரி சமுதாயமாக எடுத்து கொண்ட பாவணைகள் ஆகும். தமிழ்க் குடும்பங்கள் பிள்ளைகளின் கல்வி, தொழில் வேலைவாய்ப்பு, திருமணம் என்கிற தொலைநோக்கை அடிப்படையாக கொண்டு இயங்குபவைகள். அவ்வாறேதான் தமிழ்ச்சமுதாயமும் இயங்கி வருவதால், வட இந்தியா போலவோ, உலகினர் போலவோ தமிழ்ச்சமுதாயத்திற்குள்ளாக பெரிய பொருளாதார இடைவெளியைப் பார்ப்பது அரிதாகும். சிறு குறு நடுதட்டு தொழிலையும் வணிகத்தையும், அதிலும் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து தமிழர்களிடையே பொருளாதார சமநிலையைப் பேணிவரும் தமிழகத்தைப் போல- உலகம் பொருளாதாரச் சமநிலை பேணலுக்கு தற்போது பிட்காசு உள்ளிட்ட எண்ணிமச் செலாவணியைத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. நிகர்நிலைச் செலாவணி (கிரிப்டோகரன்சி) பயன்படுத்துவதிலும், வணிகத்தில் கொண்டு வரவும் பல நாடுகள் தயாராகி வரும் நிலையில், அமெரிக்கா ஒரு படி முன்னோடியாகப் பிட்காசு வணிகத்தை சில்லறைச் சந்தைக்குள் கொண்டு வந்தது மட்டும் அல்லாமல் அனைவரும் பயன்படுத்தும் வகைக்கு புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் உட்படப் பல முதன்மை நகரங்களில் எண்ணிமச் செலாவணியான பிட்காசுவை வாங்கவும், விற்பனை செய்யவும், பிட்காசு இருப்பை வைத்துப் பணத்தை எடுக்கும் வகையில் பிட்காசு இருப்புக்கு பணம் வழங்கும் இயந்திரம் (ஏடிஎம்) வைக்கப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையில் இருந்த பிட்காசு இருப்புக்கு பணம் வழங்கும் இயந்திரம் (ஏடிஎம்) நடப்பு ஆண்டில் குழம்பியகம் முதல் பெட்ரோல் பங்க் வரையில் மக்கள் அதிகம் புழங்கும் பெரும்பாலான இடங்களில் இந்த இயந்திரம் வைக்கப்பட்டு உள்ளன. பிட்காசு இருப்புக்கு பணம் வழங்கும் இயந்திரங்களை காயின்பிளிப், காயின்கிளவுட் போன்ற கிசோகி நிறுவனங்கள் இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 1000த்திற்கும் மேற்பட்ட இடங்களில் நிறுவியுள்ளது. கடந்த மாத தரவுகள் படி அமெரிக்காவில் மட்டும் சுமார் 28,185 பிட்காசு இருப்புக்கு பணம் வழங்கும் இயந்திரங்கள் உள்ளன. இதில் 10000 இயந்திரங்கள் கடந்த 5 மாதத்தில் நிறுவப்பட்டவை. பேபால் உட்படப் பல முன்னணி நிறுவனங்கள் நிகர்நிலைச் செலாவணி கொண்டு பொருட்களையோ, அல்லது சேவையையோ அளிக்கின்றன. மேலும் பல முன்னணி வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளைப் பிட்காசு மற்றும் இதர முதன்மையான எண்ணிமச் செலாவணிகளைக் கொடுப்பனவு முறையாக ஏற்றிடத் திட்டமிட்டு வரும் நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் நிகர்நிலைச் செலாவணி எனப்படுகிற எண்ணிமச் செலாவணி முதன்மை கொடுப்பனவு முறையாக இருக்கும். ஆனால் ஒட்டுமொத்த உலகத்திலும் வேறுபாடாக ஒற்றைத்துவம் ஆக்கல் தலைப்பில் சரக்குசேவை வரி எனும் ஒரே வரி, அனைத்துக் கல்விமுறைகளுக்கும் ஒன்றிய அரசின் நுழைவுத் தேர்வு, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை, காஷ்மீரின் சிறப்புத்தகுதி நீக்கியது, ஒரே மதம் (ஹிந்து) ஒரே மொழி (ஹிந்தி) ஒரே கட்சி (பாஜக) என்பதான வரிசையில் அதானி அல்லது அம்பானி என இந்தியாவில் ஒரே முதலாளியை தூக்கிப் பிடிக்கும் நடவடிக்கைக்கு ஒன்றிய பாஜக அரசு முயன்று வருகிறது. பணமதிப்பிழப்பை அறிவித்து, பொருளாதாரச் சமநிலை பேண தமிழகம் முன்னெடுத்துவரும், சிறு குறு நடுதட்டு தொழிலையும் வணிகத்தையும், அதிலும் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து தமிழர்களிடையே பொருளாதார சமநிலையைப் பேணிவரும் தமிழகத்தின் தொழில் வணிகத்தை வீழ்த்திய ஒன்றிய ஆட்சியில் வீற்றிருக்கிற பாஜக முயற்சி அந்த வகைக்கானதாகும். அதனால் ஒன்றிய ஆட்சியில் பாஜக வீற்றிருக்கிற இந்தியாவில்- நிலைமை தலைகீழாக உள்ளது, பாஜக அரசு, நிகர்நிலைச் செலாவணியை (கிரிப்டோகரன்சி) வைத்திருத்தலும், வர்த்தகம் செய்தாலும், விற்பனை செய்தாலும், அதை உருவாக்கினாலும் கிரிமினல் குற்றமாக அறிவிக்கும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருப்பதாக செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.