“அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய மக்களுக்கு உரிமை உண்டு. எனவே, உழவர்களைப் போராட அனுமதிக்க வேண்டும்” என்று ஐ.நா பொதுச்செயலாளர் அண்டானியா குட்ரஸின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். 21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள உழவர்கள் பதினொன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் காவல்துறையிரின் தடுப்புகளை மீறி லட்சக்கணக்கான உழவர்கள் போராடிக் கொண்டி வருகின்றனர். இயங்கலை நிகழ்வு ஒன்றில் பேசிய கனடா தலைமைஅமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ, உழவர்களின் உரிமைகளை நிலைநாட்ட கனடா என்றுமே துணைநிற்கும் என்று பேசியிருந்தார். மேலும், போராட்டச் சூழல் கவலையளிப்பதாக இருக்கிறது எனவும் ட்ரூடோ கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு ‘இந்தியாவின் உள்நாட்டு முன்னெடுப்புகளில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து, ‘இருநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றும் வெளியுறவுத் துறை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து விளக்கம் கேட்டு கனட தூதருக்கும் கவனஅறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும் இந்திய ஒன்றிய வெளியுறவுத்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக தற்போது ஐ.நா பொதுச் செயலாளரும் போராடும் டெல்லி உழவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். “அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய மக்களுக்கு உரிமை உண்டு. எனவே, உழவர்களைப் போராட அனுமதிக்க வேண்டும்” என்று ஐ.நா பொதுச்செயலாளர் அண்டானியா குட்ரஸின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். உழவர்களை முளைச்சலவை செய்யும் வகைக்கான ஒன்றிய அரசு நடத்திய கலந்;துரையாடல் 5 முறை தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், ஒன்றியத்தில் பொறுப்பில் உள்ள பாஜக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



